ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியில் 2 மாற்றங்களுக்கு வாய்ப்பு…

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியில் 2 மாற்றங்களுக்கு வாய்ப்பு…

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

3 போட்டிகள் என்பதால் தொடரில் வெற்றி பெறுவதற்கு அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் 2ஆவது போட்டியில் 2 முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், கட்டாய வெற்றி பெற வேண்டிய 2ஆவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து டிபாட்மென்டிலும் இந்திய அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இந்த மூன்றில் ஒன்றிலாவது இந்தியா சிறப்பாக விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கேட்ச்ச விடுவியா? ராகுல், வாஷிங்டன் சுந்தரை கடுப்பாகி திட்டிய ரோஹித் சர்மா.. வைரலாகும் வீடியோ!

3 போட்டிகள் என்பதால் தொடரில் வெற்றி பெறுவதற்கு அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற  வேண்டும். இந்நிலையில் நாளைய ஆட்டத்தில் ஷபாஸ் அகமதுவுக்கு பதிலாக அக்சார் படேலும், குல்தீப் சென்னிற்கு பதிலாக உம்ரான் மாலிக்கும் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

INd vs Ban | கே.எல்.ராகுல் மிஸ் செய்த இந்த ஒரு கேட்ச்... இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்

முக்கியமான கட்டத்தில் கேட்ச்சை விட்டதற்காக விக்கெட் கீப்பர் ராகுல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

' isDesktop="true" id="850845" youtubeid="1AtG7QKF2UM" category="cricket">

இதேபோன்று ஷ்ரேயாஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது.

கணிக்கப்பட்டுள்ள ஆடும் லெவன் இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(டபிள்யூ கே), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்

First published:

Tags: Bangladesh, Cricket