• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனி போல் கோலியும் விமர்சனங்களை முதிர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஞ்சுரேக்கர் குட்டு

தோனி போல் கோலியும் விமர்சனங்களை முதிர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஞ்சுரேக்கர் குட்டு

விராட் கோலி

விராட் கோலி

தோனி எப்படி விமர்சனங்களைக் கையாண்டாரோ அதே முதிர்ச்சி மற்றும் அமைதியுடன் விராட் கோலியும் கையாள வேண்டும், எரிச்சலடைவதில் பயனில்லை என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். 

  • Share this:
    தோனி எப்படி விமர்சனங்களைக் கையாண்டாரோ அதே முதிர்ச்சி மற்றும் அமைதியுடன் விராட் கோலியும் கையாள வேண்டும், எரிச்சலடைவதில் பயனில்லை என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

    கே.எல்.ராகுலின் பேட்டிங் சொதப்பல் குறித்த விமர்சனங்களை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி எரிச்சலடைந்து பதில் அளித்தது சஞ்சய் மஞ்சுரேக்கரின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் கே.எல்.ராகுல் 1, 0, 0, 14 என்று ரன்கள் எடுத்து சொதப்பினார். இதனையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன.

    இது குறித்து முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “ஒருவர் பார்மில் இல்லை என்பதால் அவர் கிரிக்கெட் ஆட்டத்தை மறந்து விட்டார் என்று அர்த்தமல்ல. என்னுடைய கரியரின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை வெளியில் பேசும் பேச்சுக்கள் என்னைப்பொறுத்தவரை அர்த்தமற்ற குப்பைதான். யாரைப் பற்றி யார் கூறுகிறார்கள், இதன் நோக்கம் என்ன, என்பதெல்லாம் வெளியில் இருக்க வேண்டும், அதனை எங்களுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என்ற தொனியில் பேசி விட்டார்.

    மேலும் முதல் ஒருநாள் போட்டியில் விமர்சகர்களுக்கு பதில் அளிக்குமாறு, ரிஷப் பந்த்தை நீக்கி விட்டு ராகுலை அணியில் எடுத்துள்ளார் .

    இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர், தன் ட்விட்டர் பக்கத்தில், “விராட் கோலி ‘நான்-சென்ஸ்’ என்று கூறியது அடிப்படையில் பொதுவெளியில் ஒருவரது ஆட்டம் பற்றிய பொது எதிர்வினை.



    அது எப்போதும் நன்றாக ஆடினால் பாராட்டுவதாகவும் சொதப்பினால் விமர்சிப்பதாக மட்டுமே இருக்கும். காலங்காலமாக இருந்து வரும் இந்த எதார்த்தத்தை விராட் கோலி புரிந்து கொள்ள வேண்டும். தோனி போல் முதிர்ச்சியுடனும் அமைதியுடனும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும், தோனி அப்படித்தான் எதிர்கொண்டார்” என்ரு பதிவிட்டுள்ளார்.

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் புனேயில் முதல் ஒருநாள் போட்டியில் ஆடிவருகின்றன, இதில் இந்திய அணி சற்று முன்வரை 28.3 ஓவர்களில் 146/1 என்று ஆடி வருகிறது. விராட் கோலி 49 பந்துகளில் 49 ரன்களுடனும், ஷிகர் தவான் 81 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 71 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: