ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசைக்க முடியா நம்பர் 1 இடத்தில் இந்தியா

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசைக்க முடியா நம்பர் 1 இடத்தில் இந்தியா

நியூசிலாந்தை வீழ்த்தி பேடிஎம் சாம்பியன் ஆன இந்திய அணி

நியூசிலாந்தை வீழ்த்தி பேடிஎம் சாம்பியன் ஆன இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

  நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் கான்பூரிலும், மும்பையிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது. கான்பூர் டெஸ்ட் பரபரப்பாக டிரா ஆக, மும்பை டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலின் அற்புதமான 150 மற்றும் அரைசதம் அஸ்வினின் 8 விக்கெட்டுகள், சிராஜின் ஆரம்பக்கட்ட வேக 3 விக்கெட்டுகள், என்று இந்தியா அபார வெற்றி பெற்றது.

  நியூசிலாந்தை மும்பையில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக 14 தொடர்களை இந்தியாவில் வென்று சாதனை புரிந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக உள்நாட்டு ஜாம்பவான் அணியாக ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளுடன் உள்ளது.

  இன்று மும்பை டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் நியூசிலாந்து அணி தன் 2வது இன்னிங்சில் 167 ரன்களுக்கு சுருண்டது, ஜெயந்த் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் மேலும் 1 விக்கெட்டுடன் 4 விக்கெட்டுகள் என்று டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

  ராகுல் திராவிட் பயிற்சியாளர் ஆன பிறகு முதல் டெஸ்ட் வெற்றி, முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியா-நியூசிலாந்து இடையேயான தொடர் முடிவரைந்துள்ள நிலையில் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதில், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துடுள்ளது. 28 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 124 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

  இந்தியாவுக்கு அடுத்தபடியாக 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நியூசிலாந்தும், 108 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.

  ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை தரவரிசையில் 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2-வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

  டி20 போட்டிகளை பொறுத்தவரை தரவரிசையில் 275 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 267 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 265 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன.

  Published by:Muthukumar
  First published:

  Tags: ICC Ranking, India vs New Zealand