முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசி டி20 தரவரிசை: டாப்-20-ல் இந்திய பவுலர்கள் யாருமே இல்லை- டாப் 10-ல் 2 ஆப்கான் ஸ்பின்னர்கள்

ஐசிசி டி20 தரவரிசை: டாப்-20-ல் இந்திய பவுலர்கள் யாருமே இல்லை- டாப் 10-ல் 2 ஆப்கான் ஸ்பின்னர்கள்

ஐசிசி டி20 தரவரிசை: பாபர் ஆசம் நம்பர் 1, விராட் கோலி நம்பர் 8

ஐசிசி டி20 தரவரிசை: பாபர் ஆசம் நம்பர் 1, விராட் கோலி நம்பர் 8

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 5-ல் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கினார். மற்ற இந்திய வீரர்கள் விராட் கோலி 8-வது இடத்திலும், ரோகித் சர்மா 16-வது இடத்திலும் உள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடர்நாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 8 இடங்கள் எகிறி 33-வது இடத்தையும், ஆட்டநாயகனாக தேர்வான மிட்செல் மார்ஷ் 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 இடங்கள் அதிகரித்து 32-வது இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஹசரங்கா (இலங்கை) முதலிடமும், தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா) 2-வது இடமும் வகிக்கிறார்கள். உலக கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 13 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 5-ல் இருந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளார். டாப்-10 இடங்களில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இப்போது அஸ்வின் பிரமாதமாக வீசி வருவதால் தொடர்ந்து வாய்ப்பளித்தால் அவர் டாப் 10 இடத்துக்கு வரக்கூடிய தகுதி உடைய பவுலர்தான். மற்றபடி பவுலர்களை அடிக்கடி மாற்றி, எடுத்தோம், கவிழ்ப்போம் அணுகுமுறையினால் இந்திய அணி பவுலர்கள் டாப் 10-ல் இடம்பெறவில்லை.

டி20 அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அசைக்க முடியா டாப் 1-ல் உள்ளது. இந்தியா 2வது இடம், பாகிஸ்தான் 3வது இடம், நியூசிலாந்து 4ம் இடம், தென் ஆப்பிரிக்கா 5ம் இடம், உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 6ம் இடத்தில் உள்ளது. பவுலிங்கில் 4ம் இடத்தில் ஆதில் ரஷீத், 5ம் இடத்தில் ரஷீத் கான், ஜோஷ் ஹேசில்வுட், முஜீப் உர் ரஹ்மான், ஆன்ரிச் நார்ட்யே. டிம் சவுதீ, ஜோர்டான் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.

இந்திய பவுலர்கள் யாரும் டாப் 20--யில் கூட இல்லை, புவனேஷ்வர் குமார் 25ம் இடத்தில் இருக்கிறார். இவரை விட்டால் தீபக் சாகர் 59ம் இடத்தில் இருக்கிறார். 86ம் இடத்தில் ரவீந்திர ஜடேஜா. மொத்தம் டாப் -100-ல் டி20 கிரிக்கெட்டில் இந்த 3 பேர்தான் உள்ளனர்.

First published:

Tags: ICC Ranking, T20