Aus vs Ban| படுமோசமான பிட்ச்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்

வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேசம்

டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்

  • Share this:
    வங்கதேசத்துக்கு ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று டாக்காவில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக ஆஸி.யை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்.

    முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 108 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. இதன் மூலம் வங்கதேசம் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் வங்கதேசம் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

    இது ஒரு குழி பிட்ச் இதில் பேட்டிங் சாத்தியமில்லை என்பதுதான் விஷயம். இரு அணி வீரர்களும் டைமிங் செய்யத் திணறினர். பொழுதுபோக்கு வடிவமான டி20 கிரிக்கெட்டே பவுண்டரிகள், சிக்சர்கள், யார்க்கர்கள், ஸ்லோபந்துகள் என்று திறமைகள் மோதும் ஒரு இடம், இங்கு பிட்சுக்கு வேலை இல்லை, ஆனால் வெற்றி பெறுவதற்காக இதிலும் குழி பிட்ச் திருவிளையாடலைப் புகுத்தியது வங்கதேசம்.

    ஏற்கெனவே மே.இ.தீவுகளுக்கு எதிராக சற்று முன்னர்தான் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 4-1 என்று தோற்று மண்ணைக் கவ்வியுள்ள நிலையில் தற்போது வங்கதேசமும் ஆஸ்திரேலியாவை உதைக்கத் தொடங்கியுள்ளது.

    வங்கதேசத்தின் முன்னணி ஸ்பின்னர்கள் 12 ஓவர்களில் 65 ரன்களுக்கு 6 ஆஸ்திரேலிய விகெட்டுகளைச் சாய்த்தனர்.

    வங்கதேசம் பேட்டிங் செய்த போது வெற்றி பெறும் நிலையில் இருந்த வங்கதேசம் பேட்டிங்கில் அலெக்ஸ் கேரி விக்கெட்டை முதல் பந்தில் இழந்து 3வது ஓவரில் மேலும் இரண்டு பேட்ஸ்மென்கள் காலியாக மிட்செல் மார்ஷ் மட்டும் பொறுமையாக பந்துக்கு ஒரு ரன் என்ற வீதத்தில் 45 ரன்கள் எடுத்தார். ஆனால் மறு முனையில் சீராக விக்கெடுகள் விழ 23 ரன்கள் குறைவில் ஆஸ்திரேலியா தோற்றது.

    வங்கதேச அணி ஸ்பின்னர்களுடன் தொடங்கியது, மெஹதி ஹசனுடன் நசூம் அகமது தொடங்கினார். நசும் அகமது 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மெகதி ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோரும் 2 விக்கெட்டுகளை ஆரம்பத்தில் வீழ்த்தினர்.

    முதலில் ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்த போது ஷாகிப் அல் ஹசன் 33 பந்துகளில் 36 ரன்கள் என்று பேட்டிங்கில் பங்களிப்பு செய்தார். பின்னால் அஃபிப் ஹுசைன் 17 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். இதனையடுத்தே ஒரு டீசண்டான ஸ்கோரை வங்கதேசம் எட்டியது.

    ஆஸ்திரேலியா இன்னிங்ஸை தொடங்கிய போது 11/3 என்று திணறியது, கேரி டக் அவுட் ஆனார். பிறகு மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் (13) நிலை நிறுத்த முயன்றனர். கடைசியில் பொறுமை இழந்து பைன்லெக்கில் கொடியேற்று அவுட் ஆனார் வேட். ஆஷ்டன் ஆகர், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் மிட்செல் மார்ஷுக்கு ஸ்டாண்ட் கொடுக்க முயன்றனர், ஆனால் ஆஷ்டன் ஆகர் ஹிட்விக்கெட் ஆனார். டர்னர் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் வெளியேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மிட்செல் மார்ஷ் சில பவுண்டரிகளை அடித்தாலும் ஸ்லாக் ஸ்வீப் ஆடப்போய் ஆட்டமிழக்க 84/6 என்று ஆஸ்திரேலியா 100-ஐ எட்டுமா என்ற நிலை ஏற்பட்டது, ஆனால் மிட்செல் ஸ்டார்க் 14 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழக்க ஸ்கோர் 108 ரன்கள் என்று வந்தது. ஆட்ட நாயகன் நசூம் அகமது.
    Published by:Muthukumar
    First published: