• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

shane warne

shane warne

இங்கிலாந்தில் ஷேன் வார்னேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினர் மற்றும் வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது

  • Share this:
சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் The Hundred எனும் உள்ளுர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டிருக்கும் நிலையில், அந்த அணிகளுள் ஒன்றான London Spirit-ன் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே செயல்பட்டு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 1) காலையில் ஷேன் வார்னேவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக லார்ட்ஸ் மைதானத்தில் Southern Brave மற்றும் London Spirit அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டிக்காக ஷேன் வார்னே நேற்று மைதானத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

Also Read:   யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

இந்நிலையில் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஷேன் வார்னே தவிர்த்து, அணி நிர்வாகி ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இருப்பினும் ஆடும் லெவன் வீரர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போல The Hundred தொடரில் அங்கம் வகிக்கும் Trent Rockets அணியின் தலைமை பயிற்சியாளரான ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி ஃபிளவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read:  குளிக்கச் சென்ற இடத்தில் பெற்றோரை பலிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் 13 வயது சிறுமி!

இங்கிலாந்தில் ஷேன் வார்னேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினர் மற்றும் வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

லெக் ஸ்பின்னிங்கில் ஜாம்பவனாக திகழும் 51 வயதாகும் ஷேன் வார்னே 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வார்னேவுக்கு கொரோனா உறுதியானதால் London Spirit அணியின் பயிற்சியாளராக Northamptonshire அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் டேவிட் ரிப்லே பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: