ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒரு நாள்போட்டியில் டெஸ்ட் மேட்ச் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்… மீம்ஸ்களால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…

ஒரு நாள்போட்டியில் டெஸ்ட் மேட்ச் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்… மீம்ஸ்களால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட், தனது அதிரடி ஆட்டம் காரணமாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்திருந்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆமை வேகத்தில் விளையாடியது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், ருதுராஜ் கெய்கவாட்டை ரசிகர்கள் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.

  இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர் முடிவில் 249 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

  அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 63 பந்துகளைச் சந்தித்து 86 ரன்களை அதிரடியாக குவித்தார். இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்கவாட், இஷான் கிஷனின் ஆமை வேக ஆட்டமே முக்கிய காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  42 பந்துகளை சந்தித்த ருதுராஜ் 19 ரன்களையும், 37 பந்துகளை சந்தித்த இஷன் கிஷன் 20 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன் காரணமாக பின்னால் வந்த பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றியின் நுனி வரை அழைத்துச் சென்றனர்.

  இந்நிலையில் ஒன் டே மேட்ச்சை, டெஸ்ட் போல் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டை ரசிர்கள் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட், தனது அதிரடி ஆட்டம் காரணமாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்திருந்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பிய நிலையில், அவருடைய முதல் சர்வதேச ஆட்டத்தில் மோசமாக விளையாடி இருப்பது விமர்சனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket