முகப்பு /செய்தி /விளையாட்டு / தோனியைப் போலவே தினேஷ் கார்த்திக் பினிஷிங்கில் அசத்துகிறார் - ரவி சாஸ்திரி

தோனியைப் போலவே தினேஷ் கார்த்திக் பினிஷிங்கில் அசத்துகிறார் - ரவி சாஸ்திரி

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தோனிக்குப் பிறகு இந்திய அணியில் பினிஷர் தட்டுப்பாடு இருக்கிறது, அந்த வறட்சியை தினேஷ் கார்த்திக் பூர்த்தி செய்ய முடியும் எனவே அவரை உலகக்கோப்பை டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தோனிக்குப் பிறகு இந்திய அணியில் பினிஷர் தட்டுப்பாடு இருக்கிறது, அந்த வறட்சியை தினேஷ் கார்த்திக் பூர்த்தி செய்ய முடியும் எனவே அவரை உலகக்கோப்பை டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அணியில் இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என்று கீப்பர்களாக உள்ளனர், இதில் ஆரம்பத்தில், நடுவில் இறங்கும் விக்கெட் கீப்பர்கள் தேவையா அல்லது கடைசியில் இறங்கி பினிஷிங் செய்யும் தோனி போன்ற பினிஷர் தேவையா என்பதை இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ரவி சாஸ்திரி.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் டெல்லியில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அசத்திய தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 330 ரன்களைக் குவித்தார். ஒரு பினிஷராக எழுச்சி பெற்றுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 183 என்பது பயங்கரமான ஸ்ட்ரைக் ரேட்.

இந்நிலையில் முன்னாள் இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, “அணியின் தேவை, நலன் கருதி விக்கெட் கீப்பர்-பேட்டரைத் தேர்வு செய்ய வேண்டும். முன் வரிசையில் களமிறங்கும் விக்கெட் கீப்பர் தேவையா, அல்லது பின்னால் இறங்கி போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் கீப்பர் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ரிஷப் பண்ட்டைப் பொறுத்தவரை 3அல்லது 4ம் நிலையில் இறங்குவார், ஆனால் அவர் சீராக ஆடுவதில்லை எனவே போட்டியை பினிஷ் செய்பவர்தான் அணிக்குத் தேவை. நான் பினிஷிங் திறன் உள்ள விக்கெட் கீப்பருக்கே ஆதரவளிப்பேன்.

சுருங்கக் கூறின் தோனியைப் போல கடைசி தருணத்தில் கைக்கொடுக்கும் கீப்பர்தான் தேவை. தோனி ஓய்வு பெற்ற பிறகு சிறந்த பினிஷர்களைப் பார்க்க முடியவில்லை. இவரது இடத்துக்கு தினேஷ் கார்த்திக்தான் வர வேண்டும். அனுபவமும் உள்ள தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆடினால் டி20 உலகக்கோப்பைக்கும் இவரையே தேர்வு செய்யலாம்” என்றார் ரவி சாஸ்திரி.

First published:

Tags: Dhoni, Dinesh Karthik, India vs South Africa, Ravi Shastri, T20 World Cup