கிரிக்கெட்டில் அசத்தும் சென்னை எல்.கே.ஜி. சிறுவன்.. ’ஜூனியர் தோனி’

  • Share this:
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப 4 வயதிலேயே தொழில்முறை கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார் இந்த எல்.கே.ஜி. சிறுவன்... 

சனுஷ் சூர்யதேவ். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த முருகன்ராஜ் - சுபத்ரா தம்பதியரின் நான்கு வயது மகன், மிக இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் சாதனைகளைப் படைக்கத் துவங்கிவிட்டான்.

இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இளம் தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற வகையில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தும் பாராட்டுகளை அள்ளியவர் இவர்.


சனுஷை ஜூனியர் தோனி என குறிப்பிட்டால்தான் பலருக்கும் தெரியும். கிரிக்கெட் திறன் ஒரு புறம்.... தோனி பிறந்த அதே ஜூலை மாதம் 7ம் தேதி பிறந்தவர் என்பது மறுபுறம். தோனியையைும் சந்தித்து அவரது பாராட்டுதல்களை பெற்றவர் இந்த ஜூனியர் தோனி.

கடந்த ஆண்டு சந்தித்தபோது சனுஷின் வயதைக் கேட்டு தோனி ஆச்சரியமுற்றதாக பெருமிதத்துடன் கூறுகிறார் தந்தை முருகன்ராஜ்.

இந்தியாவில் திறமைகள் கொட்டிக் கிடப்பதாகவும் அரசு அங்கீகரித்து உதவினால் அதுபோன்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்கிறார் தாய் சுபத்ரா.விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப ஜொலித்து வரும் இந்த ஜூனியர் தோனி... எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
First published: January 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading