மெல்போர்ன் மைதான சதர்ன் ஸ்டேண்ட் இனி ‘லெஜண்ட்’ ஷேன் வார்ன் ஸ்டேண்ட்
மெல்போர்ன் மைதான சதர்ன் ஸ்டேண்ட் இனி ‘லெஜண்ட்’ ஷேன் வார்ன் ஸ்டேண்ட்
லெஜண்ட் ஷேன் வார்ன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன், 52 வயதில் காலமானார். கிரிக்கெட் உலகையே, ஆஸ்திரேலியாவையே துக்கத்தில் ஆழ்த்திய வார்ன் தாய்லாந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன், 52 வயதில் காலமானார். கிரிக்கெட் உலகையே, ஆஸ்திரேலியாவையே துக்கத்தில் ஆழ்த்திய வார்ன் தாய்லாந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். மாரடைப்பால் காலமானதாக ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிடப்பட்டது. "ஷேன் தனது வில்லாவில் எழுப்ப எழுப்ப பதிலளிக்கவில்லை, மருத்துவ ஊழியர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. உலகையே பெரிய அதிர்ச்சியிலும் சோகத்தலும் ஆழ்த்தி விட்டார் ஷேன் வார்ன்.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான பிரபல மெல்போர்ன் கிரிக்கெட் மைதான ஸ்டேடியத்தின் சதர்ன் ஸ்டேண்டை ஷேன் வார்ன் ஸ்டேண்ட் என்று பெயரிடப்படுகிறது.
1969-2022 ஷேன் வார்ன் வாழ்ந்த காலக்கட்டம், கிரிக்கெட் உலகில் அதிகம் மதிக்கப்படாத லெக்ஸ்பின்னில் புதிய சரித்திரம் படைத்தார். பந்தை பிட்சுக்கு வெளியே குத்தி திருப்பி மைக் கேட்டிங்கை பவுல்டு எடுத்த பந்தை யாரும் மறக்க முடியாது. கிரிக்கெட் மூளை என்றே வார்னை அழைக்கலாம்.
I’ve just informed the Warne family that the Government will rename the Great Southern Stand at the MCG - the place he took his hat trick and 700th wicket - to honor Shane and his contribution to the game.
The S.K. Warne Stand will be a permanent tribute to an amazing Victorian.
வர்ணனையில் நல்ல நகைச்சுவை உண்ர்வுடன் கிரிக்கெட் நுணுக்கங்களையும் வர்ணனை கேட்போருக்குக் கற்றுக் கொடுப்பதில் அவர் அவருக்கு முந்தைய இன்னொரு ஆஸ்திரேலிய லெஜண்ட் காலஞ்சென்ற ரிச்சி பெனோவின் வாரிசு என்றே கூறலாம். ரிச்சி பெனோ எப்படி வர்ணனைக்கு எழுதா இலக்கணம் படைத்தாரோ அதே போல் ஷேன் வார்னின் லெக் ஸ்பின், கூக்ளி, நேர் பந்து பேட்ஸ்மென்களை கதிகலக்குமோ அதே போல் வர்ணனையில் அவரது விமர்சனம் கூர்மையானது.
கேப்டன்கள் முதல் வீரர்கள் வரை, அணித்தேர்வுக்குழு முதல் சிறந்த வீரர்க்ளை அடையாளம் காண்பது வரை ஷேன் வார்ன் ஷேன் வார்ன் தான் ஈடு இணையில்லை.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.