பயிற்சி ஆட்டம் டிரா: ஆஸி. லெவன் அணி 544 ரன்கள் குவிப்பு!

Cricket Aus XI vs India: Sydney Practice Match Drawn | இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. AusXIvInd

பயிற்சி ஆட்டம் டிரா: ஆஸி. லெவன் அணி 544 ரன்கள் குவிப்பு!
பெவிலியன் திரும்பும் இந்திய பேட்ஸ்மேன்கள் (BCCI)
  • News18
  • Last Updated: December 1, 2018, 12:30 PM IST
  • Share this:
சிட்னி நகரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலிய லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா (66), புஜாரா (54), கோலி (64), ரகானே (56) மற்றும் விஹாரி (53) ரன்களை எடுத்தனர்.

முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணி, இந்தியாவின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது. விக்கெட் கீப்பர் ஹாரி நீல்சென், ஆரோன் ஹார்டி இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தனர். அதிகபட்சமாக ஹாரி நீல்சென் சதம் அடித்தார். ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சில் 544 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.186 ரன்கள் பின் தங்கிய நிலையில், கடைசி நாளான இன்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் (129) சதமடித்து அசத்தினார். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை எடுத்தது. இதனால், பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்தது.

Also Watch...

First published: December 1, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்