Home /News /sports /

கிரிக்கெட்டையும் இந்தியாவையும் பிரித்துப் பார்க்க முடியாது - பிரதமர் மோடி

கிரிக்கெட்டையும் இந்தியாவையும் பிரித்துப் பார்க்க முடியாது - பிரதமர் மோடி

இந்திய மகளிர் அணி வெள்ளி வென்று வரலாறு

இந்திய மகளிர் அணி வெள்ளி வென்று வரலாறு

காமன்வெல்த் போட்டிகளில் முதன் முதலாக கிரிக்கெட் அறிமுகமாகி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதியில் தோற்றாலும் நாட்டுக்காக முதல் கிரிக்கெட் வெள்ளிப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Modinagar
    காமன்வெல்த் போட்டிகளில் முதன் முதலாக கிரிக்கெட் அறிமுகமாகி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதியில் தோற்றாலும் நாட்டுக்காக முதல் கிரிக்கெட் வெள்ளிப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

    அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு இறுதியில் நேற்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்து ஆட்டத்தையும் தங்கப்பதக்கத்தையும் கோட்டை விட்டது. ஹர்மன்பிரீத் கவுர், ஜெரிமையா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழந்த பிறகே ஆஸ்திரேலியா இந்திய அணியை முடக்கி அபார வெற்றி பெற்றது.

    முகமது அசாருதீன் இந்திய மகளிர் அணி பேட்டிங் படுமோசம் என்று சாட ரவிசாஸ்திரி சற்றே கருணையுடன் இந்திய மகளிர் அணியைப் பார்க்கிறார். ஆனால் பிரதமர் மோடி ‘ஹிஸ்டாரிக் சில்வர்’ என்று ஹர்மன்பிரீத் கவுர் தலைமை அணிக்கு புகழாரமே சேர்த்துள்ளார்:

    “கிரிக்கெட்டும் இந்தியாவையும் பிரித்துப் பார்க்க முடியாது, காமன்வெல்த் போட்டிகளில் நம் மகளிர் கிரிக்கெட் அணி பிரமாதமாக ஆடினர். நாட்டுக்காக மதிப்பு மிக்க வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளனர். காமன்வெல்த் கிரிக்கெட்டில் முதல் பதக்கம் என்பதால் இது சிறப்பு வாய்ந்தது. பிரகாசமான எதிர்காலத்துக்காக இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு என் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார் மோடி.

    அதே போல் இன்னொரு ட்வீட்டில் கிடாம்பி ஸ்ரீகாந்தைப் பாராட்டிய மோடி, “இந்திய பேட்மிண்டனின் நட்சத்திரமான கிடாம்பி ஸ்ரீகாந்த் நாட்டுக்கு வெண்கலம் வென்று கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். வளர்ந்து வரும் வீரர்களுக்கு தூண்டுக்கோலாய் இருந்து இந்தியாவை மேலும் பெருமைப்படுத்துங்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games, Modi

    அடுத்த செய்தி