ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியில் இந்திய வெற்றி பெற 187 ரன்கள் இலக்கு…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியில் இந்திய வெற்றி பெற 187 ரன்கள் இலக்கு…

அதிரடியாக ரன்களை குவித்த கேமரூன் க்ரீன்

அதிரடியாக ரன்களை குவித்த கேமரூன் க்ரீன்

சிக்சரும் ஃபோருமாக விளாசிய க்ரீன், 19 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். 21 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 187 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது.

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 20ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

  கடந்த வெள்ளியன்று நாக்பூரில் நடந்த 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இரு அணிகளும் 1-1 வெற்றி என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

  T20 உலகக்கோப்பை அணியின் பந்து வீச்சில் மாற்றம்?- இந்திய அணி நிர்வாகம் பரிசீலனை

  இதையடுத்து 3ஆவது மற்றும் தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டி தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேமரூன் க்ரீன், கேப்டன் ஆரோன் ஃபின்ச் களம் இறங்கினர். 7 ரன்களில் ஃபின்ச் வெளியேற, மறுமுனையில் சிக்சரும் ஃபோருமாக விளாசிய க்ரீன், 19 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். 21 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கடைசி நேரத்தில் டிம் டேவிட் – டேனியல் சாம்ஸ் இணை அதிரடியாக ரன்களை குவித்தது.

  டிக்கெட் வாங்க தள்ளுமுள்ளு - ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

  டிம் டேவிட் 27 பந்துகளில் 6 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களை சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்தது. இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

  இந்திய அணியில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket, India vs Australia