Home /News /sports /

வேகப்பந்து வீச்சு எழுச்சிக்கு எங்களின் உழைப்பே காரணம்; பொடி வைத்துப் பேசிய ஷமி- அப்ப சாஸ்திரி, பாரத் அருண் இல்லையா?

வேகப்பந்து வீச்சு எழுச்சிக்கு எங்களின் உழைப்பே காரணம்; பொடி வைத்துப் பேசிய ஷமி- அப்ப சாஸ்திரி, பாரத் அருண் இல்லையா?

200 விக்கெட் நாயகன் ஷமி

200 விக்கெட் நாயகன் ஷமி

ரவி சாஸ்திரி இந்த அணியின் எழுச்சிக்கு தன் பயிற்சித்திறமைதான் காரணம், உலகின் சிறந்த கோச் நான் தான் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மொகமட் ஷமி, அதெல்லாம் இல்லை வேகப்பந்து வீச்சு எழுச்சிக்கு வீச்சாளர்களின் கடின உழைப்பே காரணம் என்று ஒரே போடாகப் போட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் எழுச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் பவுலர்கள்தான், இதற்கான பெருமை அனைத்தும் வீரர்களையே சாரும் என்று200 விக்கெட் சாதனை நாயகன் மொகமட் ஷமி பொடி வைத்துப் பேசினார்.

    இவர் கூறுவதைப் பார்த்தால் ரவி சாஸ்திரி, பாரத் அருண் போன்றவர்கள் ஒன்றும் செய்யவில்லையா என்ற ஒரு இம்ப்ரெஷனை ஏற்படுத்துகிறதே?

    செஞ்சூரியனில் நேற்று தொழில்நேர்த்தியுடன் அபாரமாக வீசிய மொகமட் ஷமி 6வது முறையாக 5 விக்கெட்டைக் கைப்பற்றி 200 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா 197 ரன்களுக்கு சுருண்டு இப்போது தோல்வியை எதிர்கொண்டு வருகிறது.

    இந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த முடியாவிட்டால் இனி எப்போதும் முடியாது என்பதை கோலி-திராவிட் படை நிச்சயம் அறிந்தேயிருக்கும். இந்நிலையில் மொகமட் ஷமி தன் 200 விக்கெட்டுகள் சாதனை குறித்து அளித்த பேட்டியில், “இந்திய வேகப்பந்து வீச்சு இன்று இப்படியிருக்கக் காரணம், வீரர்களின் கடின உழைப்புத்தான். கடின உழைப்பன்றி வேறெதுவும் இல்லை.

    நாங்கள் எங்களுக்குள்ளேயே ஆலோசனைக்கூட்டங்கள் நடத்துவோம், 6-7 ஆண்டுகள் நாங்கள் கடினமாக உழைத்து இந்த ஒரு வேகப்பந்து வீச்சு யூனிட்டை வடிவமைத்துள்ளோம். வீரர்கள் தாங்களாகவே சாதித்ததுதான் இது.

    ஆம் உதவி பணிக்குழுவினருக்கும் பெருமையில் பங்கு உண்டு. நம் திறமையை அவர்கள் ஆதரிப்பார்கள், இதில் ஒரு பெயரை மட்டும் நாம் குறிப்பிட்டுச் சொல்வது நியாயமாகாது. வேகப்பந்து வீச்சு யூனிட்டாக நாங்கள் இட்ட முயற்சிகளைத்தான், கடின உழைப்பைத்தான் ஒருவர் பார்க்க வேண்டும். கடின உழைப்பையும், முயற்சியையும் இட்ட வீச்சாளர்களுக்குத்தான் நான் இந்தப் பெருமையை வழங்குவேன்.

    இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இப்போது 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளோம், 4ம் நாளில் பேட்டிங்கை கொஞ்சம் கடைசி வரை இழுக்க வேண்டும். 2வது இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தோமானால் லீட் 400 ரன்கள் பக்கம் இருக்கும்.

    பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு 4 செஷன்கள் அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கூட கொடுக்கலாம். அது கேப்டன் கோலியைப் பொறுத்தது, ஆனால் உறுதியாக 350-400 ரன்கள் தேவை.” என்றார் ஷமி.

    Also Read: 'பிரமாண்டம், அற்புதம்' : இந்தியா உலகக்கோப்பையை வென்ற 83 படத்தை பாராட்டும் ரஜினிகாந்த்

    ரவி சாஸ்திரி இந்த அணியின் எழுச்சிக்கு தன் பயிற்சித்திறமைதான் காரணம், உலகின் சிறந்த கோச் நான் தான் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மொகமட் ஷமி, அதெல்லாம் இல்லை வேகப்பந்து வீச்சு எழுச்சிக்கு வீச்சாளர்களின் கடின உழைப்பே காரணம் என்று ஒரே போடாகப் போட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Ravi Shastri

    அடுத்த செய்தி