டெல்லியில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை..! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Share this:
ஐ.பி.எல் போட்டிகள் உட்பட எந்த விதமான விளையாட்டு போட்டிகளையும் நடத்தக்கூடாது  என டெல்லி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும்  29 ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இரண்டாவது நாளே டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற இருந்தது.  இந்நிலையில் டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் உட்பட எந்த விதமான விளையாட்டு போட்டிகள் மற்றும் 200 பேருக்கு மேல் கூடும் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது  என அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போட்டியை நடத்தலாமா?  ரசிகள் இல்லாமல் போட்டியை நடத்துவதா? என்ற கேள்விகளுடன் ஐ.பி எல் நிர்வாகிகள் கூட்டம் நாளை கூடுகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும்.


மும்பையில் 29 ம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு அம்மாநில அரசு தடைவித்தது போல். டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்