கொரோனா அச்சம்: சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி நிறுத்தம்..!

கொரோனா அச்சம்: சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி நிறுத்தம்..!
சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி
  • Share this:
கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே வீரர்களின் பயிற்சி நாளை முதல் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல் தொடரின் 13-வது சீசன் ஏப்ரல் 15-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் தோனி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் கடந்த மார்ச் 2 ம் தேதி முதல் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பயிற்சியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

தோனி உள்ளிட்ட வீரர்களின் பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்கே பல ஆயிரக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் கூடத்தொடங்கின. இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பல ஆயிரக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு அமைச்சகம் அதிக மக்கள் கூடும் விளையாட்டுப்போட்டிகளை நடத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாளை முதல் சி.எஸ்.கே வீரர்களின் பயிற்சி நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்