இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதியுதவி: இந்தியாவின் நிலையைக் கண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேதனை

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதியுதவி: இந்தியாவின் நிலையைக் கண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேதனை

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு உதவி

இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ரூ. 29 லட்சத்தை நிதி உதவியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ரூ. 29 லட்சத்தை நிதி உதவியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.

  இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

  இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் நீங்கியபாடில்லை, இதனால் இடுகாடுகளில் பிணங்கள் வரத்து குறைந்தபாடில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு உதவிகள் பல தரப்புகளிலிருந்தும் குவிந்து வருகின்றன.

  சர்வதேச நாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் உட்பட பலதரப்பட்டவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

  இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ரூ. 29 லட்சத்தை நிதி உதவியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. இந்தத் தொகை யுனிசெஃப் ஆஸ்திரேலியா அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு அத்தொகை செலவிடப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

  “ இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பர பிணைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு கடும் வேதனையை அளித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஏற்கெனவே ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கமின்ஸ், பிரெட் லீ ஆகியோர் உதவிகள் அளித்துள்ளனர். ஐபிஎல் அணிகள் உதவிகள் அளித்து வருகின்றன. பாண்டியா சகோதரர்கள் ஊரகப்பகுதிகளுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க உறுதியளித்துள்ளனர்.

  இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: