விராட் கோலியின் ஒன்8 கம்யூன் என்ற சங்கிலித் தொடர் உணவகங்களில் ஓர் பாலின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த அமைப்பினர் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது பரபரப்பாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் விராட் கோலிக்குச் சொந்தமானது ஒன்8கம்யூன் என்ற சங்கிலித் தொடர் உணவகங்கள் ஆகும். இதில் புனே கிளையில் ஓர் பாலினச் சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கபப்ட்டதாக அந்த அமைப்பினர் இன்ஸ்டாகிராமில் பெரிய பதிவு ஒன்றை இட, அவர்களுக்கு ஆதரவாக கோலி உணவக நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
உங்கள் உணவகங்கள் பாகுபாடு கடைப்பிடிக்கின்றன விராட் கோலி, ஆனால் இது உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரு பிரிவினருக்கு இடையே இத்தகையை பாகுபாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. உங்கள் உணவகங்களில் மற்ற இடங்களிலும் இதே பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. நீங்கள் உடனடியாக இதை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்களுக்கு இந்த உணர்வை ஊட்டுங்கள், இல்லையேல் பாகுபாடு காட்டும் உணவு விநியோக அமைப்புகளை உங்கள் உணவகங்கள் ஆதரிக்காமல் இருக்கட்டும், என்று இன்ஸ்டாகிராமில் கோலியை அட்ரஸ் செய்து நேரடியாக ஓர் பாலினச் சேர்க்கை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பெரிய உணவகங்கள்தான் இத்தகைய பாகுபாட்டு நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இதிலிருந்துதான் உங்களுக்கு பெரிய அளவு வருமானம் வருகிறது எனும்போது பாகுபாடு பார்ப்பது சரியல்ல என்று அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் சொல்கிறது.
விராட் கோலிக்குச் சொந்தமான ஒன்8 கம்யூன் சங்கிலித் தொடர் உணவகங்களின் புனே கிளை ஓர் பாலினச் சேர்க்கையாளர்கள் ஆண் அல்லது பெண் இருதரப்பினருக்குமே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் ஆண்/பெண் உறவு என்ற இயற்கை உறவுகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறுவதாக இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்த விராட் கோலி உணவக நிர்வாகம், “நாங்கள் பாலின பேதம் பாராட்டவில்லை. மாறாக, தனிப்பட்ட பையன்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்றுதான் கூறியுள்ளோம். இது எதனால் எனில் வளாகத்தில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதே தவிர பாலின பேதமெல்லாம் இல்லை” என்று புனே கிளை மேலாளர் அமித் ஜோஷி நாளேடு ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன்8 கம்யூன் சார்பில் மறுப்பு தெரிவித்து பாலின பேதம் மட்டுமல்ல மற்ற எந்த பேதங்களும் பாகுபாடுக்கும் இங்கு இடமில்லை என்ற தொனியில் பதிவு வெளியிட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Restaurant, Virat Kohli