முகப்பு /செய்தி /விளையாட்டு / லக்னோ கிரிக்கெட் மைதானம் குறித்த எழுந்த சர்ச்சை… பராமரிப்பாளர் அதிரடி நீக்கம்

லக்னோ கிரிக்கெட் மைதானம் குறித்த எழுந்த சர்ச்சை… பராமரிப்பாளர் அதிரடி நீக்கம்

லக்னோ மைதானம்

லக்னோ மைதானம்

மைதானத்தில் உள்ளூர் போட்டிகள் அதிகம் நடத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக மைதானத்தை தயார் செய்ய போதிய அவகாசம் கிடைக்கவில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லக்னோ கிரிக்கெட் மைதானம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அதன் பராமரிப்பாளர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மைதானத்தின் தரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள்  கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் கடும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 39.5 ஓவர்கள் வீசப்பட்டும் இந்த மைதானத்தில் நேற்று முன் தினம் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், தொடரை தக்க வைக்கும் 2ஆவது டி20 போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

சுப்மன் கில் 11, இஷான் கிஷன் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் ஆட்டமிழக்க பொறுப்புடன் விளையாடிய சூர்ய குமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணை 31 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனால் இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த பிட்ச் டி20 போட்டிக்கு தகுதியானது அல்ல என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விமர்சித்திருந்தார். மிக எளிதான இலக்கை இந்திய அணி 19.5 ஆவது ஓவரில்தான் எட்டியது. இந்த மெதுவான வேகத்திற்கு மைதானத்தின் தன்மைதான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் இன்னும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மைதானத்தின் பராமரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு பதிலாக சஞ்சீவ் குமார் அகர்வால் என்ற அனுபவம் மிக்க பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மைதானத்தில் உள்ளூர் போட்டிகள் அதிக எண்ணிக்கையில் விளையாடப்பட்டதாகவும், மோசமான வானிலை காரணமாக மைதானத்தை தயார் செய்ய போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை இறுதி செய்யும் டி20 போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket