ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்டில் படுதோல்வி… அதிருப்தியை வெளிப்படுத்திய பாக். கேப்டன்

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்டில் படுதோல்வி… அதிருப்தியை வெளிப்படுத்திய பாக். கேப்டன்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்

தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் மீது நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே 2 போட்டிகள் தோல்வியடைந்த நிலையில் 3ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி, இங்கிலாந்து அணியால் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணி மீதான அதிருப்தியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் வெளிப்படுத்தியுள்ளார்.

போட்டிக்குப் பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது பாபர் ஆசம் கூறியதாவது-

முற்றிலும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிராக எங்களால் கடுமையாக போராட முடியவில்லை. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியை பாராட்டியே ஆகவேண்டும்.

‘பாக். கேப்டன் பாபர் ஆசம் ஒரு ஜீரோ… அவரை கோலியுடன் ஒப்பிடாதீர்கள்’ – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்…

முதல் இன்னிங்சில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த மைதானங்கள் எங்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவைதான். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் இங்கே விளையாண்ட அனுபவங்கள் குறைவு. அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எங்களது பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அது போதுமானதாக அமையவில்லை. இந்த தொடரில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் எங்களுக்கு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக அணியின் திறமை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சி.. ஐசிசி முடிவால் இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை தொடர்

இந்த தொடரில் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுத்து வரும் தொடர்களில் பயன்படுத்துவோம். எங்கே நாங்கள் தவறு செய்தோம் என்பதை அறிந்து, அதை சரிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். இவ்வாறு பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 7 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தானை 4-3 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி 3 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் மீது நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அணியையும் வீரர்களையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Cricket