Home /News /sports /

சஞ்சு சாம்சனுக்கு ஆறுதல்: இந்தியா ஏ கேப்டனாக நியமனம்

சஞ்சு சாம்சனுக்கு ஆறுதல்: இந்தியா ஏ கேப்டனாக நியமனம்

பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்

பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்

முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 22ம் தேதியும், மற்ற இரண்டு போட்டிகள் முறையே செப்டம்பர் 25 மற்றும் 27ம் தேதியும் நடைபெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
செப்டம்பர் 22 முதல் சென்னையில் நடக்கும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணியை வழிநடத்துவார். அணியில் பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ராகுல் திரிபாதி மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் உள்ளனர்.

இளம் வீரர்களில், திலக் வர்மா, இந்தியாவின் U-19 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கத் பாவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் பாவா ஆடியுள்ளார். ஷர்துல் தாக்குர், குல்தீப் சென், உம்ரான் மாலிக் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரைக் கொண்ட வேகப்பந்து வீச்சு வரிசையில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பைப் பெறுவது பாவாவுக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும்.

சுழல் பிரிவில் குல்தீப் யாதவ், ஷாபாஸ் அகமது மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் உள்ளனர். இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் விக்கெட் கீப்பரான சஞ்சு நீக்கப்பட்டார், அதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்தது.

Read More:  ஷர்துல் தாக்குர், குல்தீப் சென், உம்ரான் மாலிக் மற்றும் நவ்தீப் சைனி 

முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 22ம் தேதியும், மற்ற இரண்டு போட்டிகள் முறையே செப்டம்பர் 25 மற்றும் 27ம் தேதியும் நடைபெறும்.

இந்தியா ஏ அணி விவரம்:
பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பாவா.

செப்டம்பர் 22: IND A v NZ A, சென்னைசெப்டம்பர் 25: IND A v NZ A, சென்னைசெப்டம்பர் 27: IND A v NZ A, சென்னை
Published by:Srilekha A
First published:

Tags: New Zealand, Sanju Samson, T20 World Cup

அடுத்த செய்தி