Home /News /sports /

Virat Kohli| சபாஷ் விராட் - கோலி வந்த பிறகு இத்தனை வெற்றிகளா?- சாதனைத் துளிகள்

Virat Kohli| சபாஷ் விராட் - கோலி வந்த பிறகு இத்தனை வெற்றிகளா?- சாதனைத் துளிகள்

விராட் கோலி

விராட் கோலி

மும்பை டெஸ்ட் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து வடிவங்களிலும் ஒவ்வொரு வடிவத்திலும் கோலி வந்த பிறகு இந்திய அணி 50 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை டெஸ்ட் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    அவரது 50வது டெஸ்ட் வெற்றியுடன், 153 ஒருநாள் வெற்றிகள், 59 டி20 சர்வதேச வெற்றிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை ப் புரிந்த ஒரே வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் விராட் கோலி. முதல் டெஸ்ட்டில் கோலி ஆடவில்லை, மீண்டும் வந்தார் மும்பையில் வெற்றியைப் பதிவு செய்தார், இங்கிலாந்தில் பெற்ற வெற்றிகளுடன் அப்படியே டெஸ்ட் வெற்றிகளின் தொடர் நாயகனாகி விட்டார் விராட் கோலி.

    பிசிசிஐ விராட் கோலியை பாராட்டி, “வாழ்த்துக்கள் விராட் கோலி, ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் கோலி வந்த பிறகு 50 வெற்றிகளைச் சாதித்துளார்” என்று பதிவிட்டுள்ளது, அதாவது நியூசிலாந்தை மும்பையில் வீழ்த்திய டெஸ்ட் வெற்றி கோலியின் 50வது டெஸ்ட் வெற்றியாகும்.

    நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல், ஒரு அணி தோல்வி அடைந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 225 ரன்களை விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

    அதேபோல, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஜாஸ் படேல் பெற்றார்.

    Also Read: IND vs NZ, 2nd Test: 45 நிமிடங்களில் முடிந்தது நியூசிலாந்து; மிகப்பெரிய வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

    இதன்மூலம், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனை பட்டியலில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவை தொடர்ந்து 3-வது நபராக அஜாஸ் பட்டேல் இணைந்தார்.

    2020ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை காணாத நியூசிலாந்து அணி, 2020 ஜனவரிக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, Cricket Records, India vs New Zealand

    அடுத்த செய்தி