Shakib Al Hasan | ஸ்டம்புகளை எட்டி உதைத்து ரகளை; ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டுக்கே ஓர் அவமானச் சின்னம்: ரசிகர்கள், நெட்டிசன்கள் தாக்கு

ஸ்டம்புகளை எட்டி உதைக்கும் ஷாகிப் அல் ஹசன்

டாக்கா பிரிமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது, இதில் இருமுறை மைதானத்தில் ஆட்டத்தின் போது அசிங்கமாக நடந்து கொண்டார் ஷாகிப் அல் ஹசன், இதனால் அவருக்கு உலகம் முழுதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

  • Share this:
    நேற்று மொகமடன் ஸ்போர்ட்டிங் அணிக்கும் அபஹானி அணிக்கும் இடையே தானாவில் நடந்த போட்டியில் மொகமடன் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட்டுக்கே அவர் ஒரு அவமானச் சின்னம் என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

    எதிரணி வீரர் முஷ்பிகுர் ரஹிம், இவரும் ஷாகிப் அல் ஹசனும் வங்கதேசத்துக்காக ஆடியுள்ளனர், சாதனை கூட்டணியைக் கூட ஒருமுறை நியூஸிலாந்தில் அமைத்தனர். ஆனால் முஷ்பிகுர் ரஹீமுக்கு எல்.பி. தரவில்லை என்பதால் ஸ்டம்பை உதைத்து நடுவருடன் சண்டை போட்டார். நேற்று ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்றார் ஷாகிப் அல் ஹசன். 6வது ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் நடுவருடன் வாக்குவாதம் புரிந்து தெரு கிரிக்கெட் போல் ஆட்டத்தையே நிறுத்த முயன்றார் ஷாகிப். ஆனால் மழையும் வந்து விட்டது.

    முதலில் ஸ்டம்பை உதைத்தார் ஷாகிப் அல் ஹசன், பிறகு அதை மைதானத்திலிருந்து பிடுங்கி தூர எறிந்தார். இதனையடுத்து அப்ஹானி அணியின் கோச்சும் வங்கதேச கிரிக்கெட்டின் இயக்குநருமான காலித் மஹ்மூதிடம் ஷாகிப் அல் ஹசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



    ஒரு அனுபவ ஆல்ரவுண்டர் ஒரு தெருக்கிரிக்கெட் ரவுடி போல் செயல்பட்டதாக ரசிகர்கள் அவரை கிரிக்கெட்டின் அவமானச் சின்னம் என்று வர்ணித்து சாடி வருகின்றனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும் ஷாகிப் அல் ஹசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நெட்டிசன்கள் சிலர் தெரு கிரிக்கெட் ஆடுபவர்கள் கூட டீசண்டாக இருக்கின்றனர். ஆனால் இவர் இப்படி இருப்பது வேதனையளிக்கிறது என்று சாடியுள்ளனர்.

    மைக்கேல் ஹோல்டிங் ஒருமுறை கோபத்தில் இப்படி ஸ்டம்பை உதைத்ததுடன் ஒப்பிட்டு சிலர் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் ஷாகிப் அல் ஹசனைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: