• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • INDvsSL | மைதானத்தில் கேப்டனுடன் இலங்கை பயிற்சியாளர் மோதல் - வைரலாகும் வீடியோ

INDvsSL | மைதானத்தில் கேப்டனுடன் இலங்கை பயிற்சியாளர் மோதல் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

India vs Sri Lanka | மிக்கி ஆர்தர், போட்டி முடிந்தபின் மைதானத்தில் நின்றிருந்த கேப்டன் சனகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
    இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் சனகாவும், பயிற்சியாளர் ஆர்தரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி உள்ளது.

    இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனைத் தொடர்ந்து அவிஷ்கா பெர்னான்டோ, மினோத் பனுகா ஆகியோர் களம் கண்டனர். மினோத் 36 ரன்களிலும், அவிஷ்கா 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் வந்த வீரர்களில் சரித் அசலன்கா 65 ரன்கள் குவித்தார்.தனஞ்சய டி சில்வா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சமிகா கருணாரத்னே 33 பந்துகளில் 44 ரன்களை விளாசி கடைசி நேர ரன்குவிப்புக்கு காரணமானார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Also Read :   ஓலிம்பிக் கிராமத்தில் உடலுறவை தடுக்க கார்ட்போர்டு கட்டில்?

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பிரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் சொற்ப ரன்களிலும், ஹர்திக் பாண்டியாக ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். மணீஷ் பாண்டே 37 ரன்களிலும், குருணால் பாண்டியா 35 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

    Also Read : ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்

    8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 49.1 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டிய நிலையில், தீபக் சஹார் 69 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தீபக் சஹார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இலங்கை அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், போட்டி முடிந்தபின் மைதானத்தில் நின்றிருந்த கேப்டன் சனகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பயிற்சியாளர் ஆர்தரைப் பார்த்து கேப்டன் சனகா கோபமாக ஏதோ பேச, உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.



    இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் அர்னாலட் தனது ட்விட்டர் பக்கத்தில், பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் இடையேயான வாக்குவாதம் டிரெஸிங் ரூமில் நடந்திருக்கலாம். களத்தில் இருவரும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்“ என்றார்.



    ரஸலின் பதிவுக்கு பதிலளித்த இலங்கை பயிற்சியாளர், நாங்கள் ஒன்றாக வென்றோம், ஒன்றாக தோற்றோம். ஆனால் நாங்கள் எப்போதுமே கற்றுக்கொள்கிறோம். சனகாவும், நானும் அணியை வளர்த்து வருகிறோம். நாங்கள் இருவரும் மிகவும் விரக்தியடைந்தோம். உண்மையில் இது ஒரு நல்ல விவாதம் தான் சண்டை எதுவுமில்லை என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: