மிகப்பெரிய சிக்ஸ்தான், ஆனா இப்படி ஆயிடுச்சே... வைரலான வீரரின் ஷாக் - எதிரணியினரின் சிரிப்பு

சிக்சர் அடித்து வேதனையடைந்த ஆசிப் அலி என்ற கிளப் வீரர்.

இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஒருவர் அடித்த சிக்ஸ் அவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்க, அவருக்கு லேசான வருத்தம் ஏற்பட, ஆனால் மற்ற வீரர்களுக்கு, மேட்சைப் பார்த்த ரசிகர்களுக்கு சிரிப்புத்தான் வந்தது.

 • Share this:
  இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஒருவர் அடித்த சிக்ஸ் அவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்க, அவருக்கு லேசான வருத்தம் ஏற்பட, ஆனால் மற்ற வீரர்களுக்கு, மேட்சைப் பார்த்த ரசிகர்களுக்கு சிரிப்புத்தான் வந்தது.

  ஆசிப் அலி என்ற அந்த வீரர் அடித்த சிக்ஸ் தான் அது. தன் கார் கண்ணாடியை தன் சிக்சரே பதம் பார்க்க அவருக்கு கார் கண்ணாடி போன சோகம், அதனால் அவரது ரியாக்‌ஷன் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. எதிரணியினர் சிரித்து மகிழ்ந்தனர்.

  வைரலான அந்த வீரரின் ரியாக்‌ஷன் இதோ:  பொதுவாக சிக்சர் அடித்தால் தூக்கி அடித்து விட்டு அதே போசில் பந்து சிக்சருக்குச் செல்வதை மகிழ்ச்சியுடன் பேட்ஸ்மென்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் இவருக்கோ சோகம் ஏற்பட்டது, காரணம் சிக்சர் மைதானத்துக்கு வெளியே நிறுத்தியிருந்த இவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்த்து விட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஹாலிபாக்ஸ் கிரிக்கெட் லீகின் கிராஸ்லி ஷீல்டி காலிறுதி ஆட்டத்தில் செயிண்ட் மேரிஸ் கிரிக்கெட் கிளப்பின் ஆசிப் அலி நன்றாக ஆடிவந்தார், அப்போது இவர் அடித்த சிக்ஸ், அதாவது ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக் மேல் பவுண்டரியைத்தாண்டி தூக்கி அடித்தார்.

  ஆனால் அது தன் காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஷாட் போய் கார் கண்ணாடியை பதம் பார்த்தவுடன் தன் கார் என்று தெரிந்தவுடன் தன் தலையிலேயே அவர் கையை வைத்துக் கொண்டு வேதனையை வெளிப்படுத்தினார்.

  சிக்சர் அடித்து விட்டு இப்படியொரு ரியாக்‌ஷன் அனைவருக்கும் சிரிப்பையே வரவழைத்தது, ஆனால் கிளப் கிரிக்கெட் ஆடும் ஆசிப் அலிக்கோ என்னடா சிக்சர் அடிக்கப் போய் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
  Published by:Muthukumar
  First published: