அடிச்சு தூக்கிய கிறிஸ் கெய்ல்... டி20 போட்டியில் இமாலாய சாதனை!

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்லின் அதிரடியான ஆட்டத்தால் ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.

  • Share this:
கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் தனது 22-வது சதத்தை கிறிஸ் கெயில் பதிவுசெய்து இமாலாய சாதனை படைத்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் ஜமைக்கா - நெவவிஸ் அணிகள் மோதின. ஜமைக்கா அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

சிக்சர்களும், பவுண்டரிகளாக விளாசிய கெய்ல் 62 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என டி20 போட்டியில் தனது 22-வது சதத்தை பதிவு செய்தார்.

கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக மைக்கேல் கிலிங்கர் 8 சதங்கள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிறிஸ் கெய்லின் அதிரடியான ஆட்டத்தால் ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. கடின இலக்குடன் களமிறங்கிய நெவவிஸ் அணி அவர்களுக்கு சற்றும் சளைத்தாவர்கள் இல்லை என்பது போல் அதிரடியாக விளையாடி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டினர்.

இதனால் கிறிஸ் கெய்லின் சாதனை சதம் வீண் போனது. நெவவிஸ் அணியின் தாமஸ் 40 பந்துகளில் 71 ரன்கள் பறக்கவிட்டு வெற்றிக்கு வழிவகுத்தார்.

டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையும் கெய்ல் வசம் தான் உள்ளது.

கிறிஸ் கெய்ல் - 954
பொலார்ட் - 622
மெக்கல்லம் - 485

Also Watch

Published by:Vijay R
First published: