டர்பன் அணிந்து பஞ்சாப் சிங் போன்றே மாறிய கிறிஸ் கெய்ல்.. காரணம் இதுதான்

கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் டர்பன் அணிந்து பஞ்சாப் சிங் போல் இருக்கும் புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு மத்தியில், ஐபிஎல் 2021 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.

  அதன்படி வெளிநாட்டு வீரர்கள் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டு பின் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் மாலத்தீவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பாமல் அங்கேயே தனது விடுமுறை நாட்களை செலவிட்டு வருகிறார்.

  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிறிஸ் கெய்ல் மாலத்தீவில் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் தற்போது டர்பன் அணிந்தப்படி பஞ்சாப் சிங் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  Also Read :  10 வருஷமாச்சு இன்னும் ஐபிஎல் பணம் கைக்கு வரவில்லை: புலம்பும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்

  பஞ்சாபி டாடி என்ற ஆல்பம் பாடலுக்காக அவர் சிங் போன்று வேடமிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்டத்தில் நாளை வரை ஷூட்டிங்காக காத்திருக்க முடியவில்லை என்றுள்ளார். கிறிஸ் கெயிலின் இந்த புகைப்படம் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் கடந்த சீசனில் கடைசி போட்டிகளில் களமிறக்கப்பட்டார். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் குவித்த அவர் இந்த சீசனில் மோசமான ஃபார்மில் இருந்தார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 178 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: