முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐ.பி.எல் போட்டியில் அதிரடி.. வெ., இண்டீசில் கெய்லுக்கு புதிய பதவி!

ஐ.பி.எல் போட்டியில் அதிரடி.. வெ., இண்டீசில் கெய்லுக்கு புதிய பதவி!

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல். (Getty Images)

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல். (Getty Images)

#ChrisGayle named as deputy to #JasonHolder for #ICC #WorldCup2019 | உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக ஜேசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் போட்டியில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்லுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் உலகக்கோப்பை தொடரில் புதிய பதவியை வழங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த அதிரடி சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல், நடப்பு ஐ.பி.எல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த அணி லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடம் பிடித்ததால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

அந்த அணியில் சிறப்பாக விளையாடிய கெய்ல், 13 இன்னிங்சில் விளையாடி 490 ரன்கள் குவித்தார். நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும், பஞ்சாப் அணியில் 2-வது இடத்திலும் உள்ளார்.

Chris Gayle, கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல். (IPL)

இந்நிலையில், நாடு திரும்பிய கிறிஸ் கெய்லுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் புதிய பதவியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் ட்விட்டரில், “சாய் ஹோம் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இருவரும் அயர்லாந்து முத்தரப்பு மற்றும் உலகக்கோப்பை தொடரில் துணைக் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக ஜேசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணிக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!

#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Chris gayle, Cricket, ICC Cricket World Cup 2019, West indies