பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புதிய உலக சாதனை படைத்த 'கிறிஸ் கெயல்'

கிறிஸ் கெய்ல்

#ICCWorldCup2019 | #PAKvWI | #ChrisGayle | 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கெய்ல், இரட்டை சதம் விளாசினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
'யுனிவர்சல் பாஸ்' மற்றும் 'சிக்சர் மன்னன்' என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், இன்றைய போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், அந்த அணியின் மிகப்பெரிய துருப்புச் சீட்டாக விளங்குகிறார். தொடக்க வீரரான இவர், முதல் 10 ஓவர்கள் களத்தில் நின்றாலே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார்.

குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் எல்லைக்கோட்டுக்கு பந்தை விரட்டுவதில் வல்லவரான இவர், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்.அதிலும், ஒவ்வொரு போட்டியிலும் சிக்சர்கள் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பதில் முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பை தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களில் கெய்ல் மற்றும் தென்ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் 37 சிக்சர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில், டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

மேற்கிந்தியா தீவுகளுக்கு எதிரான போட்டியில் 4வது ஓவரை ஹசன் அலி வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனை அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 34 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட்டானார்.2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கெய்ல், இரட்டை சதம் விளாசினார். இப்போட்டியில், 16 சிக்சர்கள் பறக்கவிட்டதன் வாயிலாக, உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார் கிறிஸ் கெய்ல்.

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 314 சிக்சர்களுடன், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் உள்ளார். அப்ரிடி, 351 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

Also Read : Video | #ICCWorldCup2019 பிரமிக்கவைத்த ஒரு கேட்ச்... மைதானத்தையே அதிர வைத்த பென் ஸ்டோக்ஸ்...!

Also Read : உலகக்கோப்பையில் டேவிட் வார்னர் விளையாடுவாரா?

Also Watch

Published by:Vijay R
First published: