மழையால் ரத்தான போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

க்றிஸ் கெய்ல்

ICC World Cup 2019 | Chris Gayle | தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 15வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக அம்லா, டி-காக் களமிறங்கினர். அம்லா 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 5 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இவர்கள் இருவரையும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காட்ரல் அவுட்டாகினார்.

போட்டி ரத்து

போட்டியின் 8வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டி-காக் 17 ரன்னிலும், டூபிளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நீண்ட நேரம் விடாமல் மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. முடிவில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

கெய்ல் சாதனை

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த கேட்சை பிடித்தன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்களில் முதலிடத்தை பிடித்தார் கிறிஸ் கெய்ல். அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் 120 கேட்ச் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது.ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள்

கிறிஸ் கெயில் 121
கார்ல் கூப்பர் 120
பிரைன் லாரா 117
விவ் ரிச்சர்ட்ஸ் 100

Also Watch

Published by:Vijay R
First published: