ஐபிஎல் தொடரில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சதத்தை தவறவிட்டவர்கள் பட்டியலில் இணைந்தார் கிறிஸ் கெயில்.
பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதும் லீக் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி.
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தது. ராகுல் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த மாயன்க் அகர்வால் 15 ரன்களிலும், சர்ஃபராஜ் கான் 15 ரன்களிலும், சாம் குர்ரான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் பொறுப்பாக விளையாடினார் கிறிஸ் கெயில். ஐபிஎல் தொடரில் தனது 3-வது சதத்தை கிறிஸ் கெயில் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். கடைசி பந்தில் சதம் அடிக்க 5 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் சிராஜ் வீசிய பந்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.
99 ரன்களில் ஆட்டமிழக்காமல் சதத்தை தவறவிட்டவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 2013-ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சதத்தை தவறவிட்டிருந்தார். அந்தப் போட்டியில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Also watch
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.