#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

#ChrisGayle 1st batsman to hit 300 sixes in #IPLhistory | அண்மையில், கெய்ல் ஐ.பி.எல் தொடரில் 4000 ரன்களைக் கடந்தார்.

news18
Updated: March 30, 2019, 7:38 PM IST
#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!
பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். (Twitter)
news18
Updated: March 30, 2019, 7:38 PM IST
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

மொஹாலியில் நடைபெற்று வரும் 9-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றிருப்பதால், 2-வது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின.

KXIP IPL
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. (IPL)


முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, டி காக் 60 ரன்களும், ரோகித் சர்மா 32 ரன்களும், , ஹர்திக் பாண்டியா 31 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில், 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இந்தப் போட்டியில் கெய்ல் தனது 2-வது சிக்ஸரை அடித்தபோது, ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.



கெய்ல், ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 302 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் டி வில்லியர்ஸ் 192 சிக்ஸர்களுடன் உள்ளார்.





அண்மையில், கெய்ல் ஐ.பி.எல் தொடரில் 4000 ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஸ்பின்னுல இத்தனை வெரைட்டியா? எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும்... ரஷித் கான் ஓபன் டாக்!

முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


Also Watch...



First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...