Chris Cairns | திடீரென மயங்கி விழுந்து  உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

chris cairns

அவரது காலத்தில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தார், குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் தனிச்சிறப்பான வீரராக விளங்கினார்.

  • Share this:
நியூசிலாந்து முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

1989 முதல் 2006 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றவர் நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெய்ர்ன்ஸ். இவருக்கு வயது 51.

ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு சமீபத்தில் இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதயத்தில் கோளாறு ஏற்பட்டு அதற்காக சில ஆபரேஷன்களும் அவர் செய்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும், ஆனால் சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

chris cairns


உடலின் முக்கிய நரம்பு மண்டலத்தில் கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு கிழிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கிறிஸ் கெய்ர்ன்ஸின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து அவர் குறித்த தகவல்களை பகிர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Also Read:  வரதட்சணைக்காக கணவன் செய்த கொடூரச் செயல்!.. துயரத்தில் 27 வயது பெண்!

அவரது காலத்தில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தார், குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் தனிச்சிறப்பான வீரராக விளங்கினார். கிறிஸ் கெய்ர்ன்ஸின் தந்தை லான்ஸும் நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடியவர் தான்.

தனது கிரிக்கெட் கேரியரில் நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணணை செய்பவராக மாறினார்.

Also Read:   ஹாக்கி வீராங்கனைகளின் பரிசுப் பணத்துக்கு மட்டும் வரிவிலக்கு கிடையாது – ஏன் தெரியுமா?

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் டி20 தொடர் நடைபெற்றது. இரண்டு சீசன் மட்டுமே விளையாடப்பட்ட இந்த போட்டிகளில் சண்டிகர் லயன்ஸ் என்ற அணியின் கேப்டனாக கிறிஸ் கெய்ர்ன்ஸ் செயல்பட்டார். அப்போது நடைபெற்ற போட்டிகளில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

பல சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் இந்த குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி நிரபராதியாக வெளியே வந்தார் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடி வரும் கிறிஸ் கெய்ர்ன்ஸ், விரைவில் நலம் பெற வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Arun
First published: