டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார்? பயிற்சியாளரின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

சிறுவயதிலிருந்து தோனி பற்றி எனக்கு நன்றாக தெரியும். இப்போதும் முழு உடல் தகுதியுடன்தான் அவர் உள்ளார்.

Vijay R | news18
Updated: July 21, 2019, 8:15 PM IST
டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார்? பயிற்சியாளரின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
தோனி
Vijay R | news18
Updated: July 21, 2019, 8:15 PM IST
மகேந்திர சிங் தோனி முழு உடல் தகுதியுடன் உள்ளார், அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருந்தால் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடருக்கு பின் மகேந்திர சிங் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. அவரால் இனி அணியில் தொடர முடியாது பல வியூகங்கள் அவரது ஓய்வு குறித்து வலம் வந்தது.

துணை ராணுவப்படையில் அடுத்த 2 மாதங்களுக்கு பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் என்னால் பங்கேற்க முடியாது என தோனி பி.சி.சி.ஐக்கு கடிதம் மூலமாக தெரிவித்தார். மேலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.


பி.சி.சி.ஐ அதிகாரிகளும் ஓய்வு குறித்து மகேந்திர சிங் தோனி தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர் எதிர்கால திட்டம் குறித்து தோனியிடம் கலந்து ஆலோசிப்போம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து அவரது இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறுகையில், “சிறுவயதிலிருந்து தோனி பற்றி எனக்கு நன்றாக தெரியும். இப்போதும் முழு உடல் தகுதியுடன்தான் அவர் உள்ளார். அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்று அவரின் நெருங்கிய நண்பர்களுக்கே தெரியாது. எனக்கு கூட தெரியாது. ஆனால் அவர் இன்றும் முழு உடல் தகுதியுடன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடி வருகிறார்.

ஒரு குறிப்பிட்ட வீரரிடமிருந்தே முழு அளவில் எதிர்பார்ப்பு இருக்க கூடாது. அவர் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். எல்லாத் தொடர்களிலும் அவரை விளையாட வைக்காமல் முக்கியமான தொடர்களில் மட்டும் அவரை பங்கேற்க வைக்க வேண்டும். தோனி மீதான அழுத்தம் குறைக்கப்பட்டால் அவர் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற டி20 உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவார்“ என்றார்.

Loading...

Also watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...