தோனி அவுட்டே இல்லை - வைரலாகும் சிறுவன் அழும் வீடியோ

இதையடுத்து சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.

தோனி அவுட்டே இல்லை - வைரலாகும் சிறுவன் அழும் வீடியோ
தோனி
  • News18
  • Last Updated: May 13, 2019, 2:01 PM IST
  • Share this:
சென்னை- மும்பை அணிக்கு எதிரான இறுதிபோட்டியில் தோனி அவுட்டானதை அடுத்து சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கோப்பையை சென்னை, மும்பை அணிகளே வெல்வதாக தோனி கூறியுள்ளார்.

12-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது, இந்நிலையில் நேற்று சென்னை மும்பை அணிகள் மோதிய இறுதிபோட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.


சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சனும், டூபிளிஸிஸும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த போது டூபிளிஸிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பதி ராயுடு, 2 ரன்களிலும் ஆட்டமிழக்க வாட்சன் அதிரடியாக விளையாடினார்.

ஆட்டத்தின் 12.4-வது ஓவரில் சென்னை அணியின் கேட்பன் தோனி ரன் அவுட் ஆனார். ஆனால் அது ரன் அவுட் இல்லை பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தோனி ரன் அவுட் ஆனதை அடுத்து சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில். அந்த சிறுவன் ‘ தோனி அவுட்டே இல்லை. சும்மா அவுட் கொடுக்குறாங்க’ என்று கூறி அம்பையரை திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.கடைசி ஓவரில் 9 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் வாட்சன் 4-வது பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சென்னை அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாகூர் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் மலிங்கா.

இதையடுத்து சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.

Also watch

First published: May 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்