ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வில்லாவில் மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஷேன் வார்ன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஷேன் வார்ன் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வாரன்னின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வெகு சீக்கிரமாக அவர் மரணமடைந்து விட்டார் என்பதை சொல்லாமல் இருக்க முடியாது. உண்மையான மேதையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மாயாஜல சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார்.
ஷேன் வார்ன் மரண செய்தியை அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.