• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • புஜாராவுக்கு ஏன் ஊதிய உயர்வு இல்லை? ரசிகர்கள் அதிருப்தி!

புஜாராவுக்கு ஏன் ஊதிய உயர்வு இல்லை? ரசிகர்கள் அதிருப்தி!

புஜாரா. (ICC)

புஜாரா. (ICC)

#CheteshwarPujara's snub from Grade A Plus contract | இளம் வீரர் ரிஷப் பண்ட் ‘ஏ’ பிரிவுக்கு முன்னேறியுள்ளார். #BCCIContract

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியப் பட்டியலில் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வரும் புஜாராவுக்கு  ஊதிய உயர்வு அளிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வீரர்களுக்கான ஊதியப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. ‘ஏ’ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு பிரிவாக வீரர்கள் பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

    மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ‘ஏ’ பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோக, ஒவ்வொரு போட்டிகளுக்கும் என தனித்தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது.

    BCCI, பிசிசிஐ
    பிசிசிஐ . (AFP)


    இந்த நிலையில், கடந்த ஆண்டு ‘ஏ’ பிளஸ் பிரிவில் இருந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது ‘ஏ’ பிளஸ் பிரிவில் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

    ‘ஏ’ பிரிவில் ஷிகர் தவான், புவனேஷ்வர் குமாருடன் சேர்த்து, அஸ்வின், புஜாரா, தோனி, ரஹானே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதியம் வழங்கப்படும். இளம் வீரர் ரிஷப் பண்ட் ‘ஏ’ பிரிவுக்கு முன்னேறியுள்ளார்.

    Rishabh Pant, ரிஷப் பண்ட்
    ரிஷப் பண்ட். (Image AP)


    ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோர் ரூ.3 கோடி ஊதியம் பெறும் ‘பி’ பிரிவிலும், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, ஹனுமா விகாரி, கலீல் அகமது, சாஹா ஆகியோர் ரூ.1 கோடி ஊதியம் பெறும் ‘சி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தப் பட்டியலில், டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாராவை ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தத்தில் சேர்க்காததால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது. இந்த தொடரில் புஜாரா 3 சதங்களுடன் 521 ரன் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    கோலிக்கு எப்படி பவுலிங் போட வேண்டும்? ஆஸி. பவுலர்களுக்கு வார்னே அட்வைஸ்!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: