• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய டெஸ்ட் அணியின் ‘பாகுபலி’ புஜாராவுக்கு இன்று பிறந்த நாள்!

இந்திய டெஸ்ட் அணியின் ‘பாகுபலி’ புஜாராவுக்கு இன்று பிறந்த நாள்!

புஜாராவா... அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூறி ஐ.பி.எல் போட்டியில் ஓரங்கப்பட்ட நிலையில், டி-20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

புஜாராவா... அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூறி ஐ.பி.எல் போட்டியில் ஓரங்கப்பட்ட நிலையில், டி-20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

#CheteshwarPujara’s 31st birthday | இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் புஜாராவுக்கு, முன்னாள், இன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #PujaraBirthday ##PujaraHBD

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ‘மாடெர்ன் வால்’ என்று அழைக்கப்படும் புஜாரா இன்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் பேட்ஸ்மேன் புஜாரா. 7 இன்னிங்சில் களமிறங்கி 521 ரன்கள் விளாசியது, இந்தியாவின் 71 ஆண்டுகளாக தாகம் தீர்க்க உதவியது.

    Pujara, புஜாரா
    மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய புஜாரா. (BCCI)


    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 3 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என பேட்டிங் சராசரி 74.42 ஆக வைத்திருந்த புஜாரா, தொடர் நாயன் விருதை தட்டிச் சென்றார். இதனால், பாகுபலி, இந்திய அணியின் நவீனகால சுவர் உள்ளிட்ட பல பெயர்களை புஜாராவுக்கு சூட்டியுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

    Pujara, புஜாரா
    சதம் அடித்த புஜாராவை கட்டியணைத்து பாராட்டும் கேப்டன் கோலி. (BCCI)


    இந்நிலையில், புஜாரா இன்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், “நீங்கள் ஆடுகளத்தில் இருக்கும்போது, ‘பொறுமையின் சிலை’ ஆக இருக்கிறீர்கள், மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.



    ஐசிசி தனது ட்விட்டரில், “டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், இந்தியாவின் ராக்கிங் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா, டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளது.



    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா இரட்டை சதம் அடித்த வீடியோவை பதிவிட்டு, பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.



    அதேபோல், முன்னாள் வீரர் முகமது கைப், “கிளாசிக்கல் டெஸ்ட் பேட்டிங் பாணியை உயிருடன் வைத்திருப்பதற்கு நன்றி” என கூறியுள்ளார்.



    இவர்கள் தவிர, கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், குல்தீவ் யாதவ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.







    WWE போட்டியில் களமிறங்கும் ‘தல’ தோனி? கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: