தற்போது பூதாகாரமாக வெடித்துள்ள இனவெறிப் பிரச்சனை பற்றி எரியும் யார்க் ஷயர் கிளப்புக்கு செடேஸ்வர் புஜாரா ஆடும்போது அவர் முதல் பெயரை உச்சரிக்க முடியாத காரணத்தினால் ஸ்டீவ் என்று பெயர் சூட்டியதாக புஜாரா நம்பினார், ஆனால் இப்போது ரேசிசத்தை அம்பலப்படுத்திய அஜீம் ரஃபீக் அது இனவெறி மேலாதிக்கத்தைக் குறிக்கும் வெள்ளையர்கல் அல்லாதவர்களை பொத்தாம் பொதுவாக மந்தை போல் குறிக்கும் ஒரு சொல் என்று புதியக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
தன்னை யார்க் ஷயரில் ஜாக் புரூக்ஸ் முதல் டாப் நிர்வாகிகள், வீரர்கள் அனைவரும் ஸ்டீவ் என்று அழைத்ததற்கு அப்போது கிரிக்கெட் டாட் காம் என்ற ஆஸ்திரேலிய இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் புஜாரா, “செடேஸ்வர் என்பதை உச்சரிக்க முடியவில்லை, அதனால் ஸ்டீவ் என்று அழைக்கலாமா என்று ஜாக் புரூக்ஸ் கேட்டார். என் பெயரை உச்சரிக்க முடியவில்லை எனவே நிக் நேம் ஒன்றை வைப்போம் என்றார். அப்போது அவர் ஸ்டீவ் என்று உங்களை அழைக்கிறோம்” என்று வெள்ளந்தியாக புஜாரா அப்போது பேட்டியளித்தார்.
ஆனால் இப்போது அஜிம் ரஃபீக் என்ற யார்க்ஷயர் வீரர் இனவெறியை அம்பலப்படுத்தும் போது, ஸ்டீவ் என்ற பெயர் பற்றியும் நிறவெறி பெயர்தான் என்று குறிப்பிட்டார், “நான் யார்க்ஷயரை விட்டு கிளம்பிய பிறகு செடேஷ்வர் புஜாரா இணைந்தார். ஜாக் புரூக்ஸ்தான் ஸ்டீவ் என்று அவரை அழைத்தார். ஜாக் மட்டுமல்ல பயிற்சியாளர்கள், மீடியாக்கள், யார்க்ஷயர் வெப்சைட், யார்க் ஷயர் ட்விட்ட்ர் பக்கம் சில உயர்மட்ட நபர்கள் என்று அனைவருமே புஜாராவை ‘ஸ்டீவ்’என்றே அழைத்தனர்.
ஸ்டீவ் என்பார்கள், கெவின் என்பார்கள் இதெல்லாம் ஒருவரை இழிவு படுத்தி அழைக்கும் பெயர்கள், ஆசியர்கள், வெள்ளையர் அல்லாதவர்களை இப்படித்தான் பொத்தாம் பொதுவாக அழைப்பார்கள். அலெக்ஸ் ஹேல்ஸ் தன் நாய்க்கு கெவின் என்று பெயர் வைத்து அழகு பார்த்தார், அந்த நாய் கரிய நிறமாக இருந்ததே காரணம். இது ஜோக் என்று ஆனது அருவருப்பாக உள்ளது.” என்றார் ரஃபீக்.
பாவம் புஜாரா இது தெரியாமல் அப்பாவியாக ஸ்டீவ் என்ற பெயரில் தன்னை அழைக்க அனுமதித்துள்ளார் என்கிறார் ரஃபீக்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.