புஜாராவின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு
ரோஹித் சர்மா இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2141 ரன்களை எடுத்துள்ளார். 6 சதங்கள் இதில் அடங்கும்.

புஜாரா.
- News18 Tamil
- Last Updated: January 1, 2021, 3:49 PM IST
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை எய்தியுள்ளது, இந்நிலையில் பார்முக்குத் திணறும் செடெஸ்வர் புஜாராவின் துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இவருக்குப் பதிலாக ரஹானேவுக்கு உறுதுணையாக, துணைக் கேப்டனாக அணிக்கு மீண்டும் வந்துள்ள ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி தன் முதல் குழந்தை பிறப்புக்காக டெஸ்ட் தொடரிலிருந்து அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு விலகியதையடுத்து ரஹானேவை கேப்டனாகவும், புஜாராவை துணைக் கேப்டனாகவும் நியமித்தனர். இப்போது ரோஹித் சர்மா அணிக்குத் திரும்பியதால் துணைக் கேப்டனாக அவர் மீண்டும் பதவி கொடுக்கப்பெற்றார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் நிரந்தரமாக விளையாடுபவர் அல்ல, இப்படியிருக்கையில் புஜாராவை மாற்றியது சர்ச்சைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஜாராவின் பேட்டிங்கும் இந்தத் தொடரில் எதிர்பார்ப்புக்கிணங்க அமையவில்லை. அடிலெய்டில் 43, 0, மெல்போர்னில் 17,3 என்று சொதப்பி வருகிறார்.ரோஹித் சர்மா இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2141 ரன்களை எடுத்துள்ளார். 6 சதங்கள் இதில் அடங்கும்.
இவருக்குப் பதிலாக ரஹானேவுக்கு உறுதுணையாக, துணைக் கேப்டனாக அணிக்கு மீண்டும் வந்துள்ள ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி தன் முதல் குழந்தை பிறப்புக்காக டெஸ்ட் தொடரிலிருந்து அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு விலகியதையடுத்து ரஹானேவை கேப்டனாகவும், புஜாராவை துணைக் கேப்டனாகவும் நியமித்தனர்.