முகப்பு /செய்தி /விளையாட்டு / 75 பந்துகளில் சதம்: கோலி, பாபர் அசாமைக் கடந்து புஜாரா அதிசய சாதனை

75 பந்துகளில் சதம்: கோலி, பாபர் அசாமைக் கடந்து புஜாரா அதிசய சாதனை

கோலி - புஜாரா

கோலி - புஜாரா

Cheteshwar Pujara : மட்டைவைத்து ஆடுவதற்குப் பெயர் பெற்ற புஜாரா தற்போது 5 போட்டிகளில் 3வது அதிரடி சதத்தை எடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ராயல் லண்டன் ஒன் டே கோப்பை ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக மீண்டும் ஒரு சதமெடுத்தார் புஜாரா, அவர் 75 பந்துகளில் சதம் எடுத்து பிறகு 90 பந்துகளில் 132 ரன்களை விளாசினார், இதனையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமைக் கடந்துள்ளார் புஜாரா.

மட்டைவைத்து ஆடுவதற்குப் பெயர் பெற்ற புஜாரா தற்போது 5 போட்டிகளில் 3வது அதிரடி சதத்தை எடுத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக விளாசப்பட்டது, இவருடன், தொடக்க வீரர் டாம் அல்சாப் தனிப்பட்ட ஸ்கோராக 189 ரன்களை விளாச சசெக்ஸ் அணி 400 ரன்களைக் குவித்தது.  இதனையடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா குறைந்தது 100 இன்னிங்ஸ்களை ஆடியவர்களில் கோலி மற்றும் பாபர் அசாமைக் கடந்து 109 இன்னிங்ஸ்களில் 57.48 என்ற சராசரியை வைத்துள்ளார்.

Also Read: ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் எல்லோரும் வாயை மூடிக்கொள்வார்கள் - கோலிக்கு கொடிபிடிக்கும் ரவி சாஸ்திரி

மைக்கேல் பெவன் 385 இன்னிங்ஸ்களில்தான் 57.86 என்ற சராசரியை லிஸ்ட் ஏவில் வைத்துள்ளார். பாபர் அசாம் 56.56, கோலி 56.60 என்ற சராசரியை வைத்துள்ளனர்.  இந்த இன்னிங்ஸ் மூலம் புஜாரா 8 இன்னிங்ஸ்களில் 614 ரன்களை எடுத்துள்ளார். இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த 2வது வீரர் ஆனார். லிஸ்ட் ஏ மட்டுமல்லாது இந்த கவுண்ட்டி சீசனில் சிகப்புப் பந்து கிரிக்கெட்டிலும் புஜாரா 13 இன்னிங்ஸ்களில் 1094 ரன்களுடன் 109.40 என்ற சராசரியை வைத்துள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும், அதிலும் 3 இரட்டைச் சதங்கள் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Babar Azam, Cheteshwar Pujara, Cricket, Virat Kohli