ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக தொடர்கிறார் சேத்தன் சர்மா… புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக தொடர்கிறார் சேத்தன் சர்மா… புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

சேத்தன் சர்மா

சேத்தன் சர்மா

விண்ணப்பங்களை பரிசீலித்த ஆலோசனைக்குழு தகுதியின் அடிப்படையில் 11 பேரை நேர் காணலுக்கு அழைத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மற்ற நிர்வாகிகளின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்கு கடந்த 2020 டிசம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல்கள் நடைபெற்ற நிலையில் சேத்தன் சர்மா தேர்வுக்குழு தலைவராக தொடர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் அவர் மீண்டும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் தெற்கு மண்டலதிற்கு ஸ்ரீதரன் சரத், மத்திய மண்டலத்திற்கு சிவ் சுந்தர் தாஸ், கிழக்கு மண்டலத்திற்கு சுப்ரதா பானர்ஜி, மேற்கு மண்டலத்திற்கு சலில் அங்கோலா ஆகியோர் தலைவர்களாக இடம்பெற்றுள்ளனர்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சுலக்சனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சாபேயை கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி, தேர்வுக்குழு நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டது. 5 பேர் கொண்ட குழுவுக்காக விளம்பரம் கடந்த 2022 நவம்பர் 18ஆம் தேதி செய்யப்பட்டு 600 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்களை பரிசீலித்த ஆலோசனைக்குழு தகுதியின் அடிப்படையில் 11 பேரை நேர் காணலுக்கு அழைத்தது.

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சானியா மிர்ஸா?

இதன் அடிப்படையில் சேத்தன் சர்மா, சிவ் சுந்தர் தாஸ், சுப்ரதாபானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

India vs Srilanka T20 : வீரர்கள் மாற்றமின்றி களமிறங்கிய இந்திய அணி… இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ சேர்ப்பு

இதில் தலைவர் பொறுப்புக்கு சேத்தன் சர்மா பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: BCCI