முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘உடல் தகுதியை நிரூபிக்க ஊசி செலுத்திக் கொள்வார்கள்’ – இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சேத்தன் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டு

‘உடல் தகுதியை நிரூபிக்க ஊசி செலுத்திக் கொள்வார்கள்’ – இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சேத்தன் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டு

சேத்தன் சர்மா

சேத்தன் சர்மா

இந்திய வீரர்கள் சூப்பர் ஸ்டார்கள். அவர்களுக்கு டாக்டருக்கா பஞ்சம் ஏற்படும்? போன் செய்தால் டாக்டர்கள் வீட்டிற்கே வந்து ஊசி போட்டுவிட்டு செல்லப் போகிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் தகுதியை நிருபிப்பதற்காக வீரர்கள் ஊசிகளை செலுத்திக் கொள்வார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய ஆபரேஷனில் சேத்தன் சர்மா பல பரபரப்பான தகவல்களையும், குற்றச்சாட்டுகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேட்டி இந்திய கிரிக்கெட் உலகில் மட்டுமின்றி சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ரகசியமாக எடுக்கப்பட்ட பேட்டியில் சேத்தன் சர்மா கூறியதாவது- வீரர்கள் சிலர் 85 சதவீத உடல் தகுதியுடன்தான் இருப்பார்கள். மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும் கூட, தாங்கள் விளையாட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒழுங்காக குனியக் கூட தெரியாது. அவருக்கு ஒன்று அல்லது இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றபடி, 80 சதவீத உடல் தகுதியுடைய வீரர்கள், ஊசியை எடுத்துக் கொண்டு வந்து, தாங்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகசொல்வார்கள். வலி மருந்தை வீரர்கள் சிலர் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் வரும் என்பதை வீரர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இதேபோன்று ஊசியை பயன்படுத்துவதால் போதை தடுப்பு நடவடிக்கையில் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இந்திய வீரர்கள் சூப்பர் ஸ்டார்கள். அவர்களுக்கு டாக்டருக்கா பஞ்சம் ஏற்படும்? போன் செய்தால் டாக்டர்கள் வீட்டிற்கே வந்து ஊசி போட்டுவிட்டு செல்லப் போகிறார்கள். பெரும்பாலும் ஊசியை செலுத்தி உடல் தகுதியை நிரூபிக்கும் வீரர்களிடம் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோன்று விராட் கோலி கேப்டன்ஷிப் நீக்கம், பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் தலையீடு உள்ளிட்டவை குறித்தும் சேத்தன் சர்மா கூறியுள்ள கருத்துக்கள் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன,

First published:

Tags: Cricket