ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர்வார் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர்வார் என தகவல்

சேத்தன் சர்மா

சேத்தன் சர்மா

பலவீனமான அணியாக கருதப்படும் வங்கதேசத்திடம், இந்தியா தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தொடர்வார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பொறுப்பில் அவர் கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் இருந்து வருகிறார். சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மேற்கொண்டது. இதன் அடிப்படையில் கிரிக்கெட் ஆலோசனை குழுவினர் தேர்வுக்குழுவுக்கான நேர்காணலை தொடங்கினர்.

கிரிக்கெட் ஆலோசனை குழுவில் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சாபே, சுலக்சனா நாயக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். புதிய தேர்வுக்குழுக்கான நேர்காணல் மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் சேத்தன் சர்மாவே தேர்வுக்குழுவின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியுடன் மோதி தோல்வியடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து படுதோல்வி அடையச் செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. பலவீனமான அணியாக கருதப்படும் வங்கதேசத்திடம், இந்தியா தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தேர்வுக்குழு கலைக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழுவில் இடம்பெற விரும்புவோர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

விரைவில் புதிய தேர்வுக்குழு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

Ind vs SL | ஹர்டிக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி... Playing XI இது தான்?

இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலங்கையுடன் முதல் டி20 போட்டி.. தட்டித்தூக்குமா இந்தியா? பலம் பலவீனம் என்ன?

இந்த கூட்டத்தின்போது, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cricket, Indian team