சேப்பாக்கம் மைதானத்தின் ஐ, ஜே, கே கேலரிகளுக்கு தடைநீக்கம்... கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்

சேப்பாக்கம் மைதானத்தின் ஐ, ஜே, கே கேலரிகளுக்கு தடைநீக்கம்... கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்
சேப்பாக்கம் மைதானம்
  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விதிமீறி கட்டப்பட்டதாக மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட 3 கேலரிகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகள் 12 ஆயிரம் இருக்கைகளுடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது.

இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அரசிடம் முறையான அனுமதி ஏதும் பெறவில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.


இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சி அறிவுறுத்திய மாற்றங்களை கிரிக்கெட் நிர்வாகம் மறுசீரமைப்பு செய்யததால் இன்று முதல் மூன்று கேலரிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செயலாளர் ராமசாமி, சேப்பாக்கம் மண்டல மாநகராட்சி அலுவலர் முன்னிலையில் இன்று ஐ.ஜே.கே கேலரி ஓபன் செய்யப்பட்டது எனவும் இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்