#DCvRCB | டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது.

news18
Updated: March 27, 2019, 10:56 AM IST
#DCvRCB | டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
வெற்றிக்குப்பிறகு கைகுலுக்கும் தோனி - பிராவோ. (IPL)
news18
Updated: March 27, 2019, 10:56 AM IST
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர். ராயுடு, 5 ரன்களில் இஷாந்த சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, வாட்சன் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்ந்தது.

வாட்சன் 44 ரன்களிலும், ரெய்னா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், தோனி ஜோடி டெல்லி அணியின் பந்து வீச்சைத் சிதறடித்தனர். இறுதியில், 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

தோனி 32 ரன்களுடனும், பிராவோ 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 26 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய வாட்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Also Watch...

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626