உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்திய வீரர்: ரஹானே வின் புதிய சாதனை- விமர்சகர்களுக்குப் பதிலடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்திய வீரர்: ரஹானே வின் புதிய சாதனை- விமர்சகர்களுக்குப் பதிலடி

ரகானே.

அதே போல் ரஹானே நேற்று இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார், 28 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் அரங்கில் 4,500 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

  • Share this:
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 67 ரன்கள் விளாசிய ரஹானே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ரஹானே.

இந்திய அணி நேற்று புஜாரா, கில், கோலி விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த நிலையில் ரஹானே, ரோஹித் சர்மா இணைந்து குழிப்பிட்சில் கடினமான சூழ்நிலையில் 162 ரன்களைச் சேர்த்தனர். இந்திய 2ம் நாளான இன்று வந்தவுடனேயே அக்சர் படேல், இஷாந்த் சர்மா விக்கெட்டுகளை மொயின் அலியிடம் இழந்தது.

ரிஷப் பந்த் பிரமாதமாக ஆடி அரைசதம் நிறைவு செய்தார், இன்று ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளை விளாசி அவர் அரைசதம் எடுத்தார்.

நேற்று ரஹானே 16 ரன்கள் எடுத்திருந்த போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

25 இன்னிங்ஸ்களில் 3 சதம் 5 அரைசதங்கள் உட்பட 1051 ரன்களை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா இதில் 864 ரன்களையும் கோலி 788 ரன்களையும் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் 1675 ரன்களையும் ஜோ ரூட் 1550, ஸ்மித் 1341 ரன்களையும் ஸ்டோக்ஸ் 1220 ரன்களையும் எடுத்துள்ளார், ரகானே 5வது இடத்தில் இருக்கிறார்.

அதே போல் ரஹானே நேற்று இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார், 28 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் அரங்கில் 4,500 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

71 டெஸ்ட் போட்டிகளில் 4,539 ரன்கள் எடுத்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட்டுக்குப் பிறகு ரஹானே சரியாக ஆடவில்லை என்றும் சென்னையில் முதல் டெஸ்ட் தோல்வீயில் 1.0 என்றும் அவர் ஸ்கோர் சொதப்பியதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

மேலும் கோலி கேப்டன்சியில் அவர் ஆடமாட்டார், கோலியை பின்னடைவுக் காணச்செய்வார் என்று நெட்டிசன்கள் அவதூறு பரப்பினர்.

விராட் கோலியும் எதையாவது நோண்டி எடுத்துப் பேசப் பார்க்காதீர்கள், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று பேட்டியளித்தார்.

ரஹானே பேட்டிங்கில் என்னதான் பிரச்சனை என்று அனைவரும் ஆய்வு செய்யத் தொடங்கினர். அதில் அயல்நாட்டுப் பிட்ச்களில் அதிக ரன்களையும் அதிக சராசரியையும் அவர் வைத்திருக்கிறார் என்று தெரியவந்தது.

அதாவது வேகப்பந்து வீச்சு பிட்ச்களில் அவர் பிரமாதமாக ஆடியுள்ளார், குழிப்பிட்சான இந்திய பிட்ச்களில் அவர் சோபிக்க முடியவில்லை என்பதும் தெரியவந்தது.

பும்ராவை அணியிலிருந்து நீக்கி ஓய்வு அளித்திருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
Published by:Muthukumar
First published: