புலிக்குட்டியாக சீறிய ரிஷப் பந்த் அபார ஆட்டம்: ஸ்டேண்ட் கொடுக்க ஆளில்லாததால் கடும் கோபாவேசம்- இந்தியா 329 ஆல் அவுட்

புலிக்குட்டியாக சீறிய ரிஷப் பந்த் அபார ஆட்டம்: ஸ்டேண்ட் கொடுக்க ஆளில்லாததால் கடும் கோபாவேசம்- இந்தியா 329 ஆல் அவுட்

ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த் புலிக்குட்டியாகச் சீறினார். 77 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து 75.32 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் பிரமாதமாக ஆடிவந்தார், ஆனால் எதிர்முனையில் ஸ்டேண்ட் கொடுக்க ஆளில்லாமல் வரிசையாக அக்சர் படேல், இஷாந்த் சர்மா, சிராஜ் ஆட்டமிழந்ததில் கடும் கோபாவேசமடைந்தார்.

 • Share this:
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்று 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

  ரிஷப் பந்த் புலிக்குட்டியாகச் சீறினார். 77 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து 75.32 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் பிரமாதமாக ஆடிவந்தார், ஆனால் எதிர்முனையில் ஸ்டேண்ட் கொடுக்க ஆளில்லாமல் வரிசையாக அக்சர் படேல், இஷாந்த் சர்மா, சிராஜ் ஆட்டமிழந்ததில் கடும் கோபாவேசமடைந்தார். ஒரு முனையில் நாட் அவுட்டாகத் தேங்கினார்.

  இன்று ஆட்டம் தொடங்கியவுடன் அக்சர் படேல் தன் முதல் நாள் ஸ்கோரான 5 ரன்களில் எதுவும் சேர்க்காமல் மொயின் அலி பந்தை காலைத்தூக்கி முன்னால் போட்டு ட்ரைவ் ஆட முயன்றார் பின் காலும் வெளியே வந்து விட்டது, பந்து சிக்கவில்லை பின்னால் பென் ஃபோக்ஸ் பிரமாதமாக ஒரு பிளாஷ் ஸ்டம்பிங் செய்தார்.

  இதே மொயின் அலி ஓவரில் இஷாந்த் சர்மாவும் புல்டாஸ் பந்தை ஸ்வீப் ஆட முயன்று மட்டையின் சைடு விளிம்பில் பட்டு கேட்ச் ஆகி வெளியேறினார்.

  இனிமேல் அடிக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தார் ரிஷப் பந்த், காரணம் இறங்கியது குல்தீப் யாதவ். ரூட் வீசிய பந்தை திரும்பும் திசைக்கு எதிராக லாங் ஆன் மேல் மிகப்பெரிய சிக்சர் விளாசினார் ரிஷப் பந்த்.

  அடுத்த ஓவரில் மொயின் அலியை 2 பவுண்டரிகள் விளாசினார் ரிஷப் பந்த், புலிக்குட்டியாய் அவர் சீற இங்கிலாந்து கட்டுப்படுத்தத் திணறியது. கடைசி பந்தில் சிங்கிள் எடுப்பது, இல்லையே பவுண்டரி விளாசுவது என்று ஜோ ரூட்டின் களவியூகத்துக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்தார் பந்த். குல்தீப் யாதவ் 15 பந்துகளைத் தாக்குப் பிடித்தார். முன்னதாக அலி பந்தை திருப்பி விட்டு ஒரு ரன் எடுத்து அரைசதம் எடுத்தார் ரிஷப் பந்த்.

  குல்தீப் யாதவ், ஆலி ஸ்டோன் வேகத்தில் வெளியேறினார், விக்கெட் கீப்பருக்கு எளிதான கேட்ச்.

  முகமது சிராஜ் இறங்கினார், ஆலி ஸ்டோன் பந்தை ஒதுங்கிக் கொண்டு பாயிண்ட் மேல் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் அந்த ஓவரில் இன்னும் 2 பந்துகளே இருந்தன. சிராஜ் அந்த ஓவரை ஓட்டியிருந்தால் அடுத்த ஓவரை யார் வீசியிருந்தாலும் ரிஷப் பந்த் நிச்சயம் பவுண்டரிகள் சிக்சர்களை விளாசி ஸ்கோரை 350 ரன்களுக்காகவது கோண்டு சென்றிருக்கலாம்.

  ஆனால் சிராஜ் பவுண்டரி அடித்த அடுத்த பந்தே மீண்டும் அதே போல் ஒரு ஷாட்டுக்கு ஒதுங்கிக்கொண்டு ஆடினார், ஆனால் இம்முறை பவுன்ஸ் கொஞ்சம் கூடுதலாக எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது.

  இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது, ரோரி பர்ன்ஸ் இஷாந்த் சர்மா பந்தில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார். அஸ்வினை ஆடுவது கடினம் என்று தெரிகிறது. இங்கிலாந்து 7-1.

  எதிர்முனையில் ரிஷப் அந்த் கடும் கோபமடைந்தார், மட்டையை முன்னும் பின்னும் ஆட்டி தனக்குள் ஏதோ முனகிக் கொண்டார். தேவையில்லாமல் ஆட்டமிழந்து இன்னும் 20-25 ரன்கள் வருவதை கெடுத்து விட்டனர்.

  இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  Published by:Muthukumar
  First published: