சென்னை டெஸ்ட்: ஷர்துல் தாக்கூர் இல்லை, மீண்டும் ஷாபாஸ் நதீம் : இங்கிலாந்து பேட்டிங்

கோலி-ரூட்.| சென்னை டெஸ்ட்.இங்கிலாந்து பேட்டிங்

சொந்த மண்ணில் களம் காண்கிறார் வாஷிங்டன் சுந்தர். சென்னை டெஸ்ட்டுக்கான இந்திய லெவனில் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் இடம்பெற்றுள்ளனர்.

 • Share this:
  இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி லெவனில் ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.

  டாஸ் வென்ற ஜோ ரூட் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். 2வது போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  அணிக்கு இஷாந்த் சர்மா திரும்பியுள்ளார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் இல்லை ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளனர்.

  இந்திய அணி வருமாறு:

  ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

  இங்கிலாந்து அணி: டாம் சிப்லி, ரோரி பர்ன்ஸ், டேன் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், ஜோஸ் பட்லர், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  இது ஜோஸ் பட்லரின் 50வது டெஸ்ட் போட்டியாகும். வாஷிங்டன் சுந்தர் சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார்.
  இது வன்மையான பிட்ச், நாங்களும் பேட்டிங்தான் செய்திருப்போம் என்றார் விராட் கோலி. இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள் ஒரு இடது கை ஸ்பின்னர்.

  இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாபாஸ் நதீம் 2019-ல் ராஞ்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கிலும் நன்றாக ஆடக்கூடியவர் ஒரு முதல் தர சதம் எடுத்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: