• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அசைக்க முடியா ஜோ ரூட் 156 நாட் அவுட்; ஸ்டோக்ஸ் 63 நாட் அவுட்: விழிபிதுங்கும் விராட்- இங்கிலாந்து 355/3

அசைக்க முடியா ஜோ ரூட் 156 நாட் அவுட்; ஸ்டோக்ஸ் 63 நாட் அவுட்: விழிபிதுங்கும் விராட்- இங்கிலாந்து 355/3

சென்னை டெஸ்ட்: ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி.

சென்னை டெஸ்ட்: ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி.

கோலியின் கேப்டன்சியும் களவியூகமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பவுலிங் மாற்றமும் சாதுரியமாக இல்லை. 

  • Share this:
சென்னை பிட்ச் செத்தப் பிட்சா என்ற கேள்வி எழுந்துள்ளது, ஸ்விங்கும் இல்லை, பந்து அஸ்வினுக்கே திரும்ப மறுக்கிறது , இந்நிலையில் ஜோட் ரூட் 156 ரன்கள் எடுத்தும் அபாய பென் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தும் களத்தில் இருக்கின்றனர்.

கோலியின் கேப்டன்சியும் களவியூகமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பவுலிங் மாற்றமும் சாதுரியமாக இல்லை.

263/3 என்ரு தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் உணவு இடைவேளையின் போது 355/3 என்று மேன் மேலும் வலுவாகச் சென்று கொண்டிருக்கிறது. ஷாபாஸ் நதீம் வாஷிங்டன் சுந்தரின் ஒரு 3 பந்துகள் எழும்பின மற்றபடி ஒன்றுமேயாகாத பிட்ச் இது. ஒருவேளை இந்தியா பேட் செய்யும் போது திரும்பி எகிற ஆரம்பித்தால் கஷ்டம் தான்.

இன்று காலை பும்ராவும் அஸ்வினும் தொடங்கினர். பும்ரா ஒரு கால் பெயர்ப்பு யார்க்கரை ஸ்டோக்ஸுக்கு வீசினார், ஆனால் ஸ்டோக்ஸ் பந்தை தடுத்து விட்டார். பும்ராவை ஸ்லிப்புகளுக்கு இடையே ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்து தன் பவுண்டரி கணக்கைத் தொடங்கினார்.

பிறகு அஸ்வினை மிகப் பிரமாதமாக நேராக தூக்கி காலி இருக்கைகள் உள்ள ஸ்டேடியத்துக்கு அனுப்பி சிக்சர் விளாசினார் ஸ்டோக்ஸ்.

இஷாந்த் சர்மா பவுலிங் நேர்நேர் தேமா பவுலிங்காக அமைந்தது. அவர் என்ன செய்வார் பிட்சில் ஒன்றுமில்லை. அஸ்வினை மீண்டும் ஒரு புல்ஷாட்டில் ஸ்டோக்ஸ் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு அனுப்பினார். ஷாபாஸ் நதீம் வந்தவுடன் ஜோ ரூட் பவுண்டரி அடித்து 142 ரன்களுக்கு வந்தார்.

அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மாவை ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகளுக்கு விரட்டினார். இதனையடுத்து இஷாந்த் சர்மாவை கட் செய்ய வேண்டியதாயிற்று.

ஸ்டோக்ஸ் 31 ரன்களில் இருந்த போது அஸ்வினை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ஏறக்குறைய ஆட்டமிழந்திருப்பார். ஆனால் பந்து கால்காப்பில் படவில்லை, மட்டையில் பட்டதால் எல்.பி.இல்லை, இந்தியா ரிவியூவையும் இழந்தது.

ஒருமுறை நதீம் பந்தில் ஸ்டோக்ஸ் கால்காப்பில் வாங்கினார், அது பிளம்ப் போல்தான் இருந்தது நடுவர் நாட் அவுட் என்றார், ரிவியூவில் பந்து ஸ்டம்புக்கு மேல் சென்றதாக காட்டியது, இன்னொரு ரிவியூவையும் இழந்தது இந்தியா. ஸ்டோக்ஸ் அஸ்வின் பந்தை நேராக அடித்த போது மின்னல்வேகத்தில் வந்ததால் அஸ்வின் அந்தக் கேட்சை பிடிக்க முடியவில்லை.

இன்னொரு முறை நதீம் பந்தில் ஸ்டோக்ஸ் ஸ்வீப் ஆட புஜாரா அதை கேட்ச் பிடிக்கும் முயற்சியும் வீணானது. ஆனால் கேட்சை விட்ட பலனாக ஸ்டோக்ஸ் நதீமை ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். நதீமை மேலும் 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார் ஸ்டோக்ஸ். இதில் அவர் அரைசதம் எடுத்தார். ரூட்டுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பும் பறிபோனது.

இப்போதைக்கு இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே தெரிகிறது. இங்கிலாந்து 355/3. இருவரும் 92 ரன்களைச் சேர்த்து ஆடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: